அனுமின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழில் நுட்பத்தில் 40 ஆண்டு காலமாக நாம் சாதனை புரிந்து வருகிறோம். இருப்பினும் ஜப்பானில் புளூசிமா அணுமின் நிலைய பாதிப்பிற்குப் பின்னர் மிகப்பெரிய போராட்டத்தை இடிந்தகரை கிராம மக்கள் நடத்தி வருகின்றன. 14,000 கோடி செலவு செய்து அமைத்த கூடங்குலம் அணுமின் நிலையத்தை தகர்த்து ஏறிந்தால் நமது தமிழகத்திற்கு எவ்வளவு இழப்பு தெரியுமா?
நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப் பட்ட இந்த அணுமின் உலையால் எந்த பாதிப்பும் வராது என பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ளார். மின்சார துண்டிப்பின் போதும் தானியங்கி கருவிகளைக் கொண்டு தானே குளிர்வித்துக் கொள்ளும் ஆற்றல் உடையது.
விழிப்புணவு கொடுத்தும் இடிந்தகரை மக்கள் போராட்டம் நடத்தி வருவதால், மாற்று விதமாக “ தோரியத்தை” பயன்படுத்தி தான் அனுமின் நிலையை இயக்க வேண்டும். தோரியத்தின் கதிர்வீச்சை, யுரேனுயத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் 10,000 மடங்கு குறைவான அளவிலே உள்ள்து.
தோடியம், நியூட்ரானை செலுத்தினால் மட்டுமே இயங்கும். பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர்களின் போது நியூட்ரானகள் செலுத்துவதை நிறுத்தினாலே பிரச்சனையில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். அதோடு தோரியத்தின் கழிவுகளும் க்சுற்றுச் சூழலை பாதிக்காத வண்ணம் உள்ளது.
12 டன் தோரியம் கடற்கரையோரங்களிலே தான் கிடைக்கிறது. கடற்கரையோர மக்களிடம் சோதனை செய்து பார்த்த போது தோரியத்தின் கதிர்வீச்சுத் தன்மை பாதிக்கப் படவில்லை. எனவே இந்த திட்டத்தை பயன்படுத்தி எதிர் கால சந்ததிகளுக்கு நல் வாழ்க்கை அமைத்துக் கொடுப்போம்.
0 comments:
Post a Comment