பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்கு நுழையும் ஒவ்வொரு மாணவனின்
கனவு நமக்கு நல்ல வேலை கிடைக்குமா?நல்ல கம்பெனி கிடைக்குமா?அரசாங்க வேலை கிடைக்குமா?என்று தான் கனவு காண்கிறார்கள்.ஏன் மாணவனுக்கு இந்த கனவு,பெற்றோர்களுக்கும் இதே கனவு தான்.
கடனை வாங்கியவது படிக்க வை என்று சுற்றமும் நட்பும் கூறுகிறது.ஏனென்றால் இந்த கால கட்டத்தில் படிப்பு
என்பது அவசியமாகிறது.நடுத்தர குடுபங்கள் எப்படியாவது தன் மகனை Engineering படிக்க வைக்க நினைக்கிறார்கள்.படிக்கவும் வைத்து விடுகிறார்கள்.
Engineering
College தேர்ந்தெடுப்பது என்பது ரொம்ப முக்கியமான ஒன்று.நல்ல College,நல்ல Placement உள்ள கல்லூரியை தான் தேர்ந்தெடுக்க
வேண்டும்.அப்படி தேர்ந்தெடுத்தல் தான் நம் கனவு நனவாகும்.
Engineering
படித்த
மாணவனும் நான்கு வருட படிப்பு முடிந்ததும் வேலை என்ற நிலைக்கு தள்ளப்படுகிறான்.அதனால் சென்னை யை நோக்கி புறப்படுகிறான்.அங்கே
தங்குவதற்கு இடத்தை தேடி,அங்கே இருந்துக் கொண்டு
வேலை தேட வேண்டும்.அதுவரை கை செலவுக்கு வீட்டை தான் எதிர்பார்க்க வேண்டும்.வேலை எப்ப கிடைக்கும் என்று
யாராலும் சொல்ல முடியாது.வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் நாங்களும் தினந்தோறும் ஒவ்வொரு
I.T கம்பெனியாக ஏறி இறங்குகிறோம்.என்ன செய்வது கஷ்ட படாமல் எதுவும் கிடைக்காது என்பார்களே
அதனால்.
இதில் என்ன கொடுமை இருக்கிறது என்று கேட்கிறீர்களா?வேறு எந்த துறையிலும் இல்லாத கொடுமை இந்த
I.T துறையில் இருக்கிறது.அதாவது Consultancy ஒன்று உள்ளது.அங்கே நம்முடைய Profile Register பண்ணினால் எங்கே Interview இருக்கிறது என்று நமக்கு
சொல்வார்கள்.அங்கே Register பண்ணுவதற்க்கு பணம் கட்ட வேண்டும்.
Consultancy
இல்
இன்னொரு கொடுமை இருக்கிறது.அதாவது MNC கம்பெனி இல் வேலை வங்கி தருகிறோம் .சம்பளம் 3.25 லட்சம் வருடத்திர்க்கு
,ஆனால் எங்களிடம் இருந்து 2 லட்சம் முதல் மூன்று லட்சம் வரை பணம் வாங்குகிறார்கள்.
நான் இந்த கொடுமையை நேரில் பார்த்தேன்.இப்படியெல்லாம் இருக்கிறார்களே.பணத்தை
வாங்கிக்கொண்டு வேலையிலும் சேர்த்து விடுகிறார்கள்.நாளடைவில் அவனை வேலையில் இருந்து
நீக்கி விடுகிறார்கள்.காரணம் கேட்டால் ஒரு பெண் உன் மீது செக்ஸுயல் டார்ச்சர் குடுத்துருக்க
அதனால் தான்.என்று சொல்லி விடுகிறார்கள்.
Engineering
படித்த
எங்களை முட்டாள்களா நினைக்கிறார்களா இல்லை ஏமாளிகளா நினைக்கிறார்களா என்று தெரிய வில்லை.எங்களிடம் பணத்தையும் வாங்கிக் கொண்டு
உழைப்பாயையும் வாங்கிக் கொண்டு எங்களை நீக்கியும் விடுகிறார்களே என்ன செய்வது..
0 comments:
Post a Comment