Find us on Google+ ரசனைகளின் ராஜ்ஜியம் ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Tuesday 6 December 2011

ரசனைகளின் ராஜ்ஜியம்

இவ்வுலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை இருக்கும்.  நாம் விரும்புவதையே அனைவரும் விரும்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறு. அதேபோன்று நாம் விரும்புவதை பிறர் மேலே திணிப்பதும் தவறு தான்.

காலை எழுந்ததும் செய்தி தாளுக்கு ஆரம்பிக்கும் பிரச்சனை நாள் முழுவதும் ஒயாது தொடர்ந்து கொண்டிருக்கும். பையன் தினமலர் தான் வேண்டும் என்பான். அப்பா தினத்தந்தி தான் நல்ல இதழ் இதைப்படி என்று சொல்லி படிக்க வைத்தால், அவன் படிப்பானா? நிச்சயம் இல்லை.

இதனைப் போன்று தான் ஒருத்தன் அடர்ந்த ரோஸ் நிற ஆடை அணிந்திருந்தால் பஞ்சு மிட்டாய் விற்க வந்துட்டான்-டான்னு அடுத்தவர்கள் புறம் பேச ஆரம்பித்து விடுவர். அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப ரசனைகள் நிச்சயமாக மாறுபடுகின்றன. அது அவர்களுக்கு திருப்தி அளித்தால் போதுமானதே.

இதனால் நண்பர்களிடையேயும் பெரும்பாலான பிரச்சனைகள் வருகின்றன.  நான் விஜய் ரசிகன் என்றும் நான் சூரியா ரசிகன் என்றும் அடித்துக் கொள்வது தேவையற்ற வன்முறையே. அவரவர் விருப்பத்துக்கு தகுந்தவரை அவர்கள் ரசிகராக வைத்துக் கொள்வது அவர்களது தனிப்பட்ட விசயம்.

ஆகவே பிறரது ரசனைக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பொறுத்தே பிறர் நமது ரசனைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் உள்ளது.

4 comments:

பிறரது ரசனைக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பொறுத்தே பிறர் நமது ரசனைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் உள்ளது.


உண்மைதான் , ஒவொருத்தருக்கும் ஒவ்வொரு விதத்தில் ரசனை தான் , நல்ல கருத்தை சொல்லியிருக்கீங்க

வோர்ட் வெரிபிகேசன் எடுத்து விடலாமே

தமிழ் மணம் முதல் வாக்கு

இன்று எனது தளத்தில்

நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள சத்துக்களின் அளவு

ஓய்வாக இருக்கும் பொழுது வந்து படித்துப் பாருங்கள்

@M.R

நன்றி உங்கள் கருத்துக்கு ...

Post a Comment