Find us on Google+ விளம்பரங்களில் கூட பாகுபாடா? ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Friday 9 December 2011

விளம்பரங்களில் கூட பாகுபாடா?

ஒருவன் புதிதாக ஒரு கடையோ அல்லது தொழிலோ தொடங்குகிறான் என்றால் அதை
விளம்பரப் படுத்துவதற்கு அவனால் இயன்ற அளவுக்கு விளம்பரத்தாள்களை
அச்ச்சடித்து மக்களிடம் விநியோகிப்பான். ஆனால் அந்த விளம்பரத்தாளை
மதித்து வாங்கி படிப்பவர்கள் எத்தனை பேர் உள்ளனர் நம்மிடையே?
அவர்கள் கொடுக்கும் விளம்பரத்தாள்களை வாங்கிக் கொண்டு அவர்கள்
கண்முன்னே விட்டெரியும் சமுதாயம் அல்லவா நம் சமுதாயம். இன்னும் சிலர்
அந்த விளம்பரத்தாள்களை பலகாரங்கள் வைத்து சாப்பிட பயன்படுத்துகின்றனர்.
விளம்பரத்தாள்களை விநியோகம் செய்தவன் இறுதியில் அந்த இடத்தை விட்டு இடம்
பெயரும் போது கவனித்தால் அவனது கால் தடம் முழுவதும் அவன் விநியோகித்த
விளம்பரத்தாள்கள் தான் அவனுக்கு சிவப்பு கம்பளமாய் தோற்றமளிக்கும்.

பணம் மிகுந்தோர்கள் தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்துகிறார்கள், ஆனால்
அவைகளுக்கு மதிப்பளிக்கும் நாம் ஏன் விளம்பரத்தாள்களை மட்டும் மதிக்காமல்
பாகுபாடு காண்பிக்கிறோம். நாம் எதிர்பார்க்கும் சில செய்திகள் கூட நமக்கு
விளம்பரத்தாள்களின் வாயிலாக கிடைக்கலாம், ஆனால் நாம் அதை ஒரு நொடி கூட
பார்க்காமல் கீழே போடுவது தலை குனிவு தான்.அவர்களின் உழைப்புக்கு
மதிப்பளித்து ஒரு நிமிடம் வாசித்ததும் கூட கீழே போடலாமே ! சிறிய
விசயங்களில் நம்மை நாமே திருத்திக் கொள்ள பழகுவோம்.

4 comments:

த.ம இணைத்துவிட்டேன். உழைப்புக்கு நிச்சயம் மதிப்பளிக்கவேண்டும்.

nalla pathivai thanthamaikku nantrikal pala pala.

@விச்சு

ரொம்ப ரொம்ப நன்றி...எனது பதிவை த.ம தில் இணைத்தற்கு ....

@மழை தூறல்

உங்கள் கருத்து அருமை...உங்கள் வலை தளம் மிக அருமை...

Post a Comment