அவசர உலகில் காலை முதல் இரவு வரை நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு நமது அண்டை வீட்டில் உள்ளோரிடம் பேசி சிரிக்க கூட நேரம் இருக்காது. அதிலும், இன்னும் சிலருக்கு அண்டை வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பது கூட தெரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் சூரியனை காணாது சென்று விட்டு சந்திரனை பார்க்கவே வீடு திரும்புவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இணையத்தை திறந்தாலே சமூக வலைதளங்களின் நண்பர்கள் கூட்டம் அலைமோதும்.
அண்டை வீட்டில் உள்ளவனுடனே பழகத் தெரியாதவன் எல்லாம் அயல்நாட்டு காரர்களுடன் பழகுகிறான். இப்படி பட்ட மக்களால் எப்படி நம் சமுதாயத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும்? ..... சமூக வலைதளங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் நம் சமூகத்தின் மேல் காட்ட மறுக்கிறோம்? .....
இன்றைக்கு இணையத்தில் தகவல்களை தேடுபவர்களை விட சமூக வலைதளங்களில் அரட்டை அடிப்பவர்கள் தான் அதிகம்.
உதாரணமாக, சாலையில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராமல் நடந்த விபத்தில் ஒருவருக்கு காயமடைந்து இருக்கும், அவரை சுற்றி நிற்கும் கூட்டத்தில் நாமும் ஒருத்தராய் நிற்போம். ஆனால் அவரை யார் என அறியாதவராய் இருக்கும் நமக்கு அப்போது தான் தெரியும் நமது வீட்டுக்கு அருகாமையில் இருப்பவர் தான் விபத்தில் சிக்கித்தவித்தவர் என்று. இந்த நிலையில் நமது சமுதாயம் சென்று கொண்டிருந்தால் நாளை எந்த சமூக வலைதளமும் வந்து நம்மை காப்பாற்ற போவதில்லை. நாம் முன்னேறிக்கொண்டிருக்கிறோம் என்ற அறியாமையில் மிதந்து கொண்டிருக்கிறோம், உண்மையில் நாம் நம்மை அறியாமலே இழந்து கொண்டிருக்கிறோம்.
நம்முடைய முன்னோர்கள் விளையாடிய விளையாட்டுக்கள், திருவிழாக்கள், கும்மாளங்கள் எல்லாமே இன்று இணையத்தில் தனி நபராய் உயிரற்ற தட்டச்சுடன் பேசி மகிழ்வதில் கிடைக்குமா? நிச்சயம் இல்லை. பொழுதுபோக்கிற்காக நாம் சமூக வலைத்தளங்களை உபயோகிப்பது தவறல்ல , அதே சமயத்தில் அடுத்த மாநிலத்தை பற்றி அறியாமல் இருந்தாலும் கூட பரவாயில்லை, நம் அண்டை அயலாருடன் ஆவது முடிந்த அளவு நட்பு பாராட்ட பழகி கொள்ளுங்கள் . "ஊருடன் கூடி வாழ்" என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொல்லி சென்றார்கள்?
2 comments:
ஒருவர் தன் நாட்டை விட்டு வெளி நாட்டில் வசிக்கையில், தனக்குப் பரிச்சயமான மொழியில் தொடர்பு கொள்ள அந்த ஊரில் ஆள் இருக்க மாட்டார்கள்.
அவர்களுக்கு தம் மொழியில் உரையாட, தம் ஊர் நாடு பற்றி அறிந்து கொள்ள ஒரே வடிகால், இந்த சமூக வலை தளங்கள்; தாம்.
மேலும் பல உலக திரைப்படங்கள், நூல்கள், புத்தகங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள சமூக வலை தளங்கள் பெரும் பங்கு புரிகின்றன
பத்து வருடங்கள் முன் என்னால் எகனாமிஸ்ட், போர்பஸ் போன்ற பத்திரிகைகளை நெருங்க முடியாது. இன்று அவை எல்லாம் ஒரு கிளிக்கில், சமூக வலை தளங்கள் மூலம் எனக்கு வந்து விடுகிறது
@ராம்ஜி _யாஹி
இதே சமூக வலைதளங்கள் மூலமாக தான் நிறைய தவறுகள் நடக்கின்றன என்று ஆய்வு கூறியது..இதற்கு உங்கள் பதில் என்ன?
நீங்கள் என்னுடைய பதிவை தவறாக புரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன்...
Post a Comment