Find us on Google+ இயந்திர மனிதன் தான் இந்தியனோ....... ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Friday 11 November 2011

இயந்திர மனிதன் தான் இந்தியனோ.......

   அரைத்தல் முதல் துவைத்தல் வரை அனைத்துக்கும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொழில் நுட்பம் எவ்வளவோ வளர்ச்சி அடைந்துள்ளது. பாராட்டப்பட வேண்டிய விசயம் தான். காலை எழுந்தவுடன் இயந்திரங்களை பயன்படுத்த தொடங்கும் நாம் இரவு தூங்கும் வரை இயந்திரங்களுடன் தான் வாழ்க்கை நடத்தி வருகிறோம். இயந்திரங்களை உபயோகிப்பது தப்பில்லை ஆனால் நாமும் இயந்திரமாகவே மாறி வருகிறோம் என்பதை எவராலும் மறுக்க முடியுமா?

    2 பேர் வேலைக்குச் செல்லும் குடும்பத்தில் காலை 6.30 மணியில் இருந்து 8.30 மணிவரைக்கும் ஒரு இசைக் கச்சேரியே நடந்து முடிந்து விடும். ஒரு பக்கம் குக்கர் விசில் காதை பிளந்து கொண்டிருக்க, மறுபக்கம் மிக்சியின் ஓட்டம் இடைவிடாமல் அரைத்துக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் வாசிங்மிசினின் வாய் விளிம்பு வரை துணிகளை அமுக்கி வைத்து , துணிக்கும் மிசினுக்கும் சண்டையை ஏற்படுத்தி விடுவதோடு மின் இஸ்திரிப் பெட்டியின் சூடு தாங்காமல் துணிகள் கருகும் வரை கவனிக்காமல் விட்டுவிடும் அவசர உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் இயந்திரமனிதர்கள் ஒரு வழியாக வீட்டை விட்டு கிளம்பி வாகன நெரிசலை போர்க்களமாய் எதிர்த்து அலுவலகம் சென்று விடுகின்றனர். அலுவலகத்திலும் இயந்திரமாய் உழைத்திவிட்டு மீண்டும் மாலையில் வாகனப் போர்க்களத்தை சந்தித்து விட்டு வீடு திரும்புகின்றனர். இவர்கள் மீண்டும் இரவு உணவு தயார் செய்வதற்காக இயந்திரங்களை நாடி செல்கின்றனர்.

    இப்படி நாள் முழுவதும் இயந்திரங்களுடன் வாழ்க்கை நடத்தும் நாம் எப்படி அன்பும் அறவணைப்பையும் கொடுக்கவோ எதிர்பார்க்கவோ முடியும். தன் குழந்தைகளுடன் கூட கொஞ்சி விளையாட இயலாத பெற்றோர்களே நீங்கள் தான் இயந்திரமாக வாழ்கிறீர்கள் என்றால் உங்கள் குழந்தைகளையும் அந்த நிலைக்கு கொண்டு சென்று விடாதீர்கள். அவர்களை சுதந்திரத்தை வாரம் ஒரு முறையாவது ஏற்படுத்திக் கொடுங்கள்.

    பெரும்பாலானோருக்கு குறைந்த வயதிலேயே இதய நோய், இரத்த அழுத்தம் மற்றும் மன நோய் வருவதற்கான மிக முக்கிய காரணமே இயந்திர உலகில் சுதந்திரமாக பேசி சிரிக்கவோ தனது மனப் பாரங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளவோ நேரமில்லை. ஆகவே உலகம் எப்படி பட்டதாயிருப்பனும் நம் சந்தோசத்திற்கும் சிறிது நேரம் ஒதுக்கி அதில் வாழ்ந்து காட்டுவோம்.


1 comments:

///இப்படி நாள் முழுவதும் இயந்திரங்களுடன் வாழ்க்கை நடத்தும் நாம் எப்படி அன்பும் அறவணைப்பையும் கொடுக்கவோ எதிர்பார்க்கவோ முடியும். தன் குழந்தைகளுடன் கூட கொஞ்சி விளையாட இயலாத பெற்றோர்களே நீங்கள் தான் இயந்திரமாக வாழ்கிறீர்கள் என்றால் உங்கள் குழந்தைகளையும் அந்த நிலைக்கு கொண்டு சென்று விடாதீர்கள். அவர்களை சுதந்திரத்தை வாரம் ஒரு முறையாவது ஏற்படுத்திக் கொடுங்கள்.///

அருமையான கருத்துங்க..!! ஆழ்ந்து சிந்தித்து எழுதியிருக்கீங்க..!! வாழ்த்துக்கள்..!!

Post a Comment