Find us on Google+ விளம்பரத்தை விமர்சிக்காதே ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Tuesday 8 November 2011

விளம்பரத்தை விமர்சிக்காதே


சிலர் டி.வி.யில் விளம்பரங்களைப் பார்த்ததும் உடனே சூப்பர் மார்க்கெட் சென்று அந்த பொருளை வாங்கி விடுவர். இவர்கள் அனைவரும் எதிர்பார்ப்பது அந்த விளம்பரத்துக்கு நடித்துக்கொடுத்த கதாநாயகன் மற்றும் கதாநாயகியே தவிர பொருளின் தரம் அல்ல. . 

ஒரு நல்ல பொருள் என்றால் விளம்பரத்திற்கு அவசியமே இல்லையே. மூன்று ஆண்டுகளுக்கு முன் பெப்ஸி மற்றும் கொக்கக் கோலாவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருக்கிறது என்று ஒரு புரளி கிளம்பியதும் அவைகளின் விற்பனை முற்றிலும் தடைப்பட்டுபோனது. சரிந்த விற்பனையை மீண்டும் தொடர, சச்சின் பெப்ஸி குடிப்பதைப் போன்ற விளம்பரங்களை அடிக்கடி டி.வி.யில் ஒளிபரப்பினர். இதனால் பூச்சிக்கொல்லிகளை மறந்து சச்சினுக்காக பல பேர் பெப்ஸி வாங்கி குடிக்க தயாராயினர். 

இதே போல தான் ஆரம்பத்தில் ஹார்லிக்ஸின் வியாபாரம் சக்கப்போடு போட்டுக்கிட்டு இருந்தது இனிமேல் நமக்கு விளம்பரம் தேவையில்லை என்று நினைத்த  ஹார்லிக்ஸ் நிறுவனத்திற்கு அடுத்த ஒரே ஆண்டில் வீழ்ச்சி வந்து விட்டது காரணம் என்ன வென்று பார்த்தால் கபில்தேவ் நடித்துக் கொடுத்த பூஸ்ட் விளம்பரத்தினால் எல்லோரும்  பூஸ்ட் பக்கம் சாய்ந்தனர். மீண்டும் ஓராண்டுக்குப் பின்னர் ஹார்லிக்ஸ் நிறுவனம் தனது விளம்பரத்தை தொடர்ந்ததால் பழைய நிலைக்கு வரவில்லை எனினும் ஓர் நிலமையை எட்டியுள்ளது. 

மின்னும் மேனி திரிஷா போல ஆக வேண்டும் என்று விவல் சோப்பு போட்டால் மட்டும் திரிஷா போல ஆக முடியுமா?

ஆகவே விளம்பரங்களைப் பார்த்து பொருட்களை வாங்குவதை நிறுத்தி விட்டு பொருட்களின் தரம் மற்றும் மதிப்பறிந்து வாழக் கற்றுக்கொள்வோம்.

4 comments:

விளம்பரங்களைப் பார்த்து பொருட்களை வாங்குவதை நிறுத்தி விட்டு பொருட்களின் தரம் மற்றும் மதிப்பறிந்து வாழக் கற்றுக்கொள்வோம்//

சரியாக சொன்னீர்கள்...

Nice lines and nice words JP....


Thanks & Regards,

Isai Selvan S

நல்லாவே சிந்திக்கிறிர்கள் வாழ்த்துக்கள்

Post a Comment