Find us on Google+ மாருதிக்கே இந்த மாற்றமா? ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Tuesday 29 November 2011

மாருதிக்கே இந்த மாற்றமா?



ஆரம்பத்தில் இருந்தே கார்கள் என்றால் அதில் முன்னனியைப் பிடிக்கும் நிறுவனங்களுள் மாருதியும் ஒன்று. பார்ப்பதற்கு அழகாகவும் மினி சைசில் இருக்கும் மாருதிக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வந்தது.

பெட்ரோலால் இயங்கக் கூடிய கருவிகளைக் கொண்டு செய்யப்பட்ட மாருதி கார்கள் தற்போது டீசல் என்ஜின்களுக்கு மாற்றப்படுகின்றன. காரணம் என்ன வென்று பார்த்தால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை மாருதிகள் பெருமளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது தான்.


இதற்கெல்லாம் ஒரே காரணம் பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது தான். பெட்ரோலால் இயங்கும் இன்ஜின் பாகங்களைக் கொண்டு செய்யப் பட்ட கார்கள் இன்று சோக்கேஸ் பொம்மைகளைப் போன்று பயனற்று இருக்கிறது.


இந்த நேரம் டீசல் கார்களுக்கு ஓர் வசந்த காலம் போல...........  அப்படி யென்றால் பெட்ரோல் கார்களுக்கு இந்த நேரம் ஓர் இலையுதிர் காலமோ ? மீண்டும் எப்பத்தான் உதிர்ந்த இலைகளையெல்லாம் ஒட்ட வைத்து பெட்ரோலின் நேரத்தை நல்ல நேரமாக்கப் போகிறார்களோ தெரியவில்லையே.......?


நமது நாடே உணவிச்சங்கிலியை நாடித்தான் இருக்கிறது என்பதை இதன் மூலம் நன்கு உணர முடிகிறது. ஒன்றின் விலை உயர்ந்தால் அது மேல் தட்ட மக்கள் என அடித்தட்டு மக்கள் என்ன என்று பாரபட்சமே பார்க்காமல் எல்லோரையும் தாக்கி விடுகிறது.  

0 comments:

Post a Comment