Find us on Google+ மல்கோவாவின் மாந்திரீகம் ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Monday 21 November 2011

மல்கோவாவின் மாந்திரீகம்

மாங்காய் சீசனில் மாணவர்களின் கொண்டாட்டமும் அதிலும் மாங்காய் மரம் எங்கேனும் கண்ணில் பட்டால் விட்டு வைப்பார்களா? திருட்டு மாங்காய் தான் என்றும் சுவை தரும். மாங்காயால் மாணவர்களுக்கு மட்டுமா கொண்டாட்டம்? பெரியவர்களும் மாங்காய்களை ஊறுகாயாக்கி சீசாக்களில் அடைத்து உண்பதே இந்த சீசனின் ஸ்பெசாலிட்டி தான். "மா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும்" என்ற பல மொழியே உள்ளதல்லவா.....?

    பிஞ்சு பழுத்து பழமாகியதும் மாம்பழம் மணத்திலே நம்மை மனம் கவிழ வைக்கிறது. மாம்பழம் என்றாலே எல்லோருக்குள்ளும் ஒரு தித்திக்கும் சுவை நம்மை அறியாமலே வந்து போகிறது. அப்படிப்பட்ட மாம்பழத்திற்கு பெயர் பெற்றது நமது சேலம். ஒரு மாம்பழத்திற்காக பரமசிவன் குடும்பமே துண்டானது.

    மல்கோவா மாம்பழம் தான் மாம்பழத்தின் முதல் வெரைட்டி மாம்பழம் அதன் சுவையை நாம் உணரமுடியாமல் அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். மல்கோவாவின் ஒரு சதவிகிதத்தை கூட தமிழர்களுக்காக கொடுக்காமல் அப்படி என்ன ஏற்றுமதி தேவைப்படுகிறது?

    நாமெல்லாம் எத்திலீன் போட்டு பழுக்க வைத்த பழங்களை உண்டு வயிற்று வழியை சுமந்து கொள்ள நமது நாட்டு மல்கோவாவை வெளிநாடுகள் அல்லவா சுமந்து செல்கின்றன. சிங்கப்பூர் சென்ற ஒரு தமிழர் பழரசக் கடைக்குச் சென்று மாம்பழ பானத்தை வாங்கி குடித்தார். அவர் இதுவரை குடித்திராத ஒருதனி சுவை அதில் இருந்தது. எங்கே இருந்து இந்த மாம்பழம் கொண்டுவரப் படுகிறதென்று கடை முதலாளியிடம் கேட்டார் ,

    அதற்கு அவர் சொன்னார் இது மல்கோவா மாம்பழம் இந்தியாவில் இருந்து தான் கொண்டு வரப்படுகிறது என்று. நாமெல்லாம் ஏமாளிகளாகத் தான் இருக்கிறோமா? இவை மட்டுமல்ல இன்னும் எத்தனையோ தரம் வாய்ந்த பொருட்கள் எல்லாம் இந்தியாவில் உற்பத்தியாவதோடு சரி ஆனால் இந்தியனின் கண்ணில் இருந்து மறைந்து விடுகிறது.




2 comments:

மாம்பழம் மேல வருத்தமா! இல்ல நம்ம நாட்டின் பொருளாதார கொள்கை மேல கோபமா!!!
" தரம் வாய்ந்த பொருட்கள் எல்லாம் இந்தியாவில் உற்பத்தியாவதோடு சரி ஆனால் இந்தியனின் கண்ணில் இருந்து மறைந்து விடுகிறது." - உண்மை.
இந்திய அரசு கொஞ்சம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வேலையும் பார்க்கச் சொன்னால் இந்திய மக்களுக்கும் தரமான பொருட்கள் கிடைக்கும்

Learn manthreegam now solve your problems

Learn kerala,hindu,muslim manthrigam.
SUBJECTS: Male/Female vasiyam,vasiya mai,
kadhal vasiyam,kanavan manaivi vasiyam,
enemy vasiyam,vyabara vasiyam,yatchani,
dhevadhai vasiyam, graha dhosha nivarthi,
sakala dhosha nivarthi, thirumana thadai,
yeval, billi, sooniyam vilaga, kalvi, court case problem,
karya siddhi, kuzhanthai bakkiyam,kadan theera, udalkattu,
thisaikattu, and more solutions to all problems,
fees 3,999/- 3 hrs practical class, with 7 book materials,
contact: 8870296242

Post a Comment