Find us on Google+ இருண்ட உலகத்தையே வெளிச்சமாக்கிய இணையத்தின் இதயங்களே….. ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Thursday 10 November 2011

இருண்ட உலகத்தையே வெளிச்சமாக்கிய இணையத்தின் இதயங்களே…..

2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத கணக்கெடுப்பின் படி இணையத்தை செயல்படுத்துவதில் மூன்றாவது இடம் நமது இந்தியாவிற்கே.

         

சீனாவில் 45 கோடி மக்களும் , அமெரிக்காவில் 24 கோடி மக்களும் இணைய உலகில் முதல் இரண்டு இடம் பிடிக்க இந்தியர்களாகிய நாம் சும்மா இருந்து விடுவோமா என்ன? இணையத்தின் இதயங்களாய் எந்நேரமும் உழைத்துக் கொண்டிருக்கும் நாம் தற்போது இந்த இணைய உலகில் மூன்றாவது இடத்தில் காலடி பதித்துள்ளோம்.


          11.6 கோடி இந்தியர்கள் இரவு பகல் பாராமல் இணையத்தை இயக்கி கொண்டிருக்கின்றனர்.2008 ஆம் ஆண்டு 5.5 கோடியில் இருந்த நிலை இன்று இருமடங்காக உயர்ந்துள்ளது.

          இந்தியாவில் மும்பை மாநகரில் தான் அதிக எண்ணிக்கையில் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். அதற்கு அடுத்த இடத்தில் டெல்லி,கொல்கத்தா,சென்னை,பெங்களூர் போன்ற நகரங்கள் விளங்கி வருகின்றன.  24 சதவிகித பள்ளி மாணவர்களும், 27 சதவிகித கல்லூரி மாணவர்களும் இணையத்தின் இயக்குனர்களாய் வளர்ந்து வருகின்றனர்.

          மக்கள் தொகையிலேயே சீனாவை விஞ்சி விடும் அளவுக்கு வளர்ந்து வரும் நாம் இணைய சாதனையிலும் முதலிடம் வகிப்போம் வருங்காலங்களில். இன்றைய மின்னனு தொழில் நுட்பமான Gmail, yahoo போன்றவைகளால் நல்ல வருமானத்தை அடையமுடிகிறது. அப்படிப்பட்ட பெருமைக்குரிய இணையத்தில் நாம் தற்போது இணைந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணும் போது மனம் ஆனந்த வெள்ளத்தில் ஆர்பரிக்கிறது.


5 comments:

அரிய தகவல். தந்தமைக்கு பாராட்டுகள்!

நல்ல செய்திகள்..! பகிர்ந்தமைக்கு பாராட்டுகளும் , நன்றியும்..!!

கருத்துப்பெட்டியின் வேர்ட் வெரிபிகேஷனை எடுத்துவிடுங்கள். அப்போதுதான் எளிதாக வாசகர்கள் கருத்துரையிட முடியும்.

இந்தப் பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

உங்கள் பிளாக்கரில் கருத்துப்பெட்டியின் கீழ் வரும் word verification நீக்க

தங்கம்பழனி@

நன்றி உங்கள் கருத்துக்கும்,வருகைக்கும்,....

This is big issuse JP. But we cant stop this population in our country. Am really appreciate nice news. Can u upload this news to any one book? JP....


Thanks & Regards,

Isai Selvan S

Post a Comment