Find us on Google+ காசுக்கு வேசம் போடும் கன்சல்டன்சிகளிடம் தூண்டில் மீனாய் சிக்கிவிடாதீர்கள்.. ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Saturday 5 November 2011

காசுக்கு வேசம் போடும் கன்சல்டன்சிகளிடம் தூண்டில் மீனாய் சிக்கிவிடாதீர்கள்..

வேலை தேடி அலைந்து திரியும் இன்ஜினியரிங் மாணவர்களை வலைக்குள் சிக்கிய மீனைப் போன்று ஆட்டுவிக்கும் கன்சல்டன்சிகளின் ஆதிக்கம் இன்று சென்னையில் பெருகி வருகிறது.

      இலட்சக் கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு சாப்ட்வேர் கம்பெனிகளில் மாதம் பதினைந்தாயிரம் சம்பளம் வாங்கித் தருவதாக ஏமாற்றி இன்று அந்த இலட்சங்களை எல்லாம் இடமாக(ரியல் எஸ்டேட்டுகளாக) மாற்றிக் கொண்டு தனது வாழ்க்கையை செட்டில் செய்து கொள்ளும் சுயநலவாதிகளுக்கு, பல இலட்சங்களை கொடுத்து இழந்த பெற்றோர்களின் நிலை எப்படி தெரியப் போகிறது?

             படிப்பதற்கு பணம் கட்டிய தந்தை வேலயையும் பணம் கட்டி வாங்கித் தந்துவிட்டார் என்ற சந்தோசத்தில் வேலைக்குச் செல்லும் மாணவனின் மனம் ஒரே மாதத்தில் சுக்கு நூறாய் உடைந்து விடுகிறது காரணம் என்னவென்றால் ஒரு மாத முடிவில் அவனுக்கு சம்பளம் கொடுக்க மறுக்கிறது அந்த சாப்ட்வேர் கம்பெனி.

            புது கம்பெனிகளிலும், உருவாகி ஓர் இரு வருட அனுபவம் வாய்ந்த கம்பெனிகளில் மட்டும் தான் இந்த நிலை என்றால் அதற்கு போட்டியாக இன்று மல்டி நேசனல் கம்பெனிகளும் வலம் வருகின்றன.. 

            மிகப்பெரிய மல்டி நேசனல் கம்பெனிகளான HCL- லுக்கே, கன்சல்டன்சிக்காரர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு வேலைக்கு அமர்த்திகிறோம் என்ற பெயரில் மூன்று மாதத்திலே வேறு ஒரு காரணம் சொல்லி அந்த மாணவனை HCL கம்பெனியில் இருந்து வெளியே தள்ளி விடுகின்றனர்.

             இதனால் பாதிக்கப் படுபவர்கள் பொறியியல் பட்டதாரிகள் தான். வேலை தேடி சென்னைக்கு வரும் மாணவர்களின் இன்றைய மன நிலையையும் கன்சல்டன்சிகளின் ஆதிக்கத்தையும் அறியாத  பெற்றோர்கள் வேறு தனது பிள்ளைகளை படுத்தும் பாடு இன்னுமா வேலை கிடைக்கவில்லை, 80 சதவிகித மதிப்பெண் எடுத்தவனைப் பார்த்து ஒழுங்காப் படிச்சு இருந்தா தானே படிக்கிற காலத்துல என பல அவதூறு வார்த்தைகளை தாங்கிக் கொள்ள முடியாத பட்டதாரிகள் இன்று மிகுந்த மன உழைச்சலுக்கு ஆளாகிறார்கள். 

            பல இலட்சங்களை வாங்கிக் கொண்டு இருந்த இடமே தெரியாமல் மறைந்து போகும் கன்சல்டன்சிகளின் இன்றைய நிலையால் இன்ஜினியரிங் மாணவர்களின் வேலைவாய்ப்பே மதில் மேல் பூனையாக உள்ளது? 

            இதற்கெல்லாம் காரணம் என்ன? பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 510 ஆக உயர்ந்துள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் எண்ணிலடங்கா மாணவர்கள் வேலைக்காக அலைந்து திரியும் சூழலை தங்களுக்கு சாதமாக  பயன்படுத்திக் கொண்டு பணம் சம்பாதிக்கிறார்கள்.

      இந்த நிலை நீடித்தால் நாளடைவில் 30 ஆம் இடத்தில் மென் பொருள் வளர்ச்சியில் இருக்கும் நாம் 300 வது இடத்திற்கு சென்றால் கூட வியப்பதற்கு ஒன்றுமில்லை.

0 comments:

Post a Comment