Find us on Google+ சுதந்திரமான சமூக வலைத்தளம் வேண்டுமா? ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Tuesday 6 March 2012

சுதந்திரமான சமூக வலைத்தளம் வேண்டுமா?



சமூகவலைதலங்கள் எதற்காக ஆரம்பத்தில் உருவாகின என்பது தெரியுமா அமெரிக்காவில் 2002 ஆம் ஆண்டு "டீன்-ஏஜ்" மாணவர்களுக்கு இடையே நடந்த ஒரு கலந்தாய்வின் முடிவில் பல "டீன்-ஏஜ்"மாணவர்களுக்கு எளிதில் பிறருடன் உரையாடவோ, எளிதில் கருத்துகளை வெளிப்படுத்தவோ தெரியவில்லை என்பது அறியவந்தது.

இதற்காக உருவாக்கப்பட்டது தான் சமூக வலைத்தளம். 2002 ஆம் ஆண்டில் இருந்து அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு பல சமூக வலைதளங்கள் வெளிவந்தன.  அவைகளில் சில, Orkut , Hi5 , Twiter , Face Book , LinkedIn , Myspace , Mixi, Tagworld , Bebo , Piczo , Tumblr .   

சமூக வலைதளங்கள் உருவாகி
10 ஆண்டுகள்  கூட நிறைவுறாத நிலையில் 800 மில்லியன் மக்களை தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது மிகப்பெரிய சாதனை தான் . ஆனால் அதே நேரத்தில் பக்கத்து வீட்டில் இருப்பவன்  யார் என்று கூட தெரியாத இன்றைய சூழலில் நாம் அண்டை மாநிலத்தாருடனும் சமூக வலைதலங்களில்  மணிக்கணக்காக உறவு பேணுவது எந்த விதத்தில் நியாயம்?

எவ்வளவோ நல்ல வித செயல்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரிமாற்றங்கள் public -ஆக  share   செய்யப்படுகிறது. நாம் விரும்பிய நபருக்கு மட்டும் ஷேர் ஆகினால் போதும் என்ற நிலையில்  private   sharing   முறையை நாம் தேர்வு செய்து கொள்ளலாம். பல ஆக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட சமூக வலைதங்கள் இன்று அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. வன்முறைகளையும், தீவிரவாதத்தையும் இன்று சமூக வலைதளங்களில் காட்டி வருகின்றன.

இந்த ஆண்டு மட்டும் பல லட்சம் பெண்கள் பெண் வன்முறைத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். கண்ணோடு கண் பார்த்து காதல் மொழிகள் பேசிய காலமெல்லாம் மலையேறிவிட்டது. இன்று பார்க்காமலே காதல் என்கிற பெயரில் பெண்களை ஏமாற்றிவரும் கள்வர்கள் அதிகரித்துள்ளனர். சமூக வலைதளங்கலில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்கள் வன்முறை கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன.   ஏன் அரசியல் வாதிகள் கூட த் தவறான  வழிகளில் சமூக வலைத்தளங்களை  உபயோகப் படுத்தியதற்கான  சான்றுகள் ஏராளம் , அதற்கு சான்றாக நமது தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் அனுப்பியது போல் twitter  சமூக வலைத்தளத்தில்  இருந்து அவர்கள் அனுப்பியது மாறியான சமூக விரோத தகவல்களை அனுப்பி பின்னர் மாட்டிக்கொண்ட நிகழ்வுகள் பல.

ஆனால் நல்ல வழிகளுக்காக உருவாக்கப்பட்ட சமூகவளைதளத்தை இன்று தீவிரவாதத்திற்காகவும் வன்முறை கொடுமைகளுக்காகவும் பலர் தவறான வழிகளில் பயன்படுத்தி வருவதால் அதன் மதிப்பை படிப்படியாக இழந்து வருகிறது இதனால் சமூக  வலைதளத்தையே close பண்ணிவிட வேண்டும் என்ற சர்ச்சை எழுந்தது.


ஆனால் இவை அனைத்திற்க்கும் தீர்வு காணும் பொருட்டும் , ஆண்களின் தொல்லையை தடுப்பதற்காகவும் மற்றும் பெண்கள் வன்முறையை
தடுப்பதற்காகவும்  பெண்களுக்கென ஒரு சமூக இணைய தளத்தை தொடங்கி உள்ளார்   கனடா வைச் சேர்ந்த ஒரு பெண்மணி அலெக்சாண்ட்ரா ஜோன்ங்.இந்த இணைய தளத்தில் ஆண்கள் சேர தடை
விதிக்கப் பட்டுள்ளது. லிங்க்டு இன் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட மற்ற   இணையதளங்களையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இணைய தளம்: https://www.luluvise.com/


இதில் உறுப்பினர் ஆவதற்கு Face Book  Twitter  ,  LinkedIn வழியாக  பயனர் பெயரையும் கடவுச் சொல்லையும் கொடுத்து உள்ளே செல்லலாம். ஆனால் LULUVISE.COM மிகுந்த பாதுகாப்புக்குரிய தகவல் பரிமாற்ற வலைதளம். பிரைவேட் முறையில் நமது தகவல்கள் சேகரித்து வைக்கப் படுவதே இந்த வலைதளத்தின் சிறப்பம்சம்இந்த பிரைவேட் முறையால் எவராலும் நமது தகவல்களை காண முடியாது. சமூக வலைதளங்களில் பாதுகாப்பான வழிகளில் உறுப்பினராய் இருக்க ஆசைப்படுபவர்கள் LULUVISE.COM இல் உடனே இணையுங்கள்.     சுதந்திரமாக சமூகவலைதலங்களை உபயோகப்படுத்துங்கள்.

1 comments:

நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

Post a Comment