Find us on Google+ தகவல் தொழில் நுட்பத்தில் கடைசி இடம் தமிழகத்திற்கா? ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Wednesday 28 March 2012

தகவல் தொழில் நுட்பத்தில் கடைசி இடம் தமிழகத்திற்கா?


கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கு பார்த்தாலும் ஆசிரியர் பயிற்சி மையங்கள் முளைத்து வந்தன , ஒரு கட்டத்தில் ஆசிரியர் பயிற்சி முடித்த பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து பல ஆயிரம் பேர் வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு இன்னும் காத்துக் கொண்டே இருக்கும் வேளையில், பொறியியல் படிப்பை நோக்கி மக்கள் பார்வை சென்றது.

ஆனால் , பொறியியல் பட்டதாரிகளில் தற்போதைய நிலை என்ன?

திறமையான பொறியியல் பட்டதாரிகள் மற்றும் அவர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்து 22 மாநிலங்களில் நடந்த ஆய்வில், தமிழகத்திற்குத்தான் கடைசி இடம் கிடைத்துள்ளது. 2011 இல் படிப்பை முடித்த 55 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகளில் 10% பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. மீதமுள்ள 90% பேரின் நிலை என்ன?

தமிழகத்தை மாற்றி மாற்றி ஆண்டு வரும் தி.மு.-வும் அ.தி.மு.-வும் எல்லா வகையிலும் தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்றிக் காட்டுவதே நோக்கம் என சபதம் போடுகின்றனரே தவிர, எதையும் சாதித்துக் காட்ட வில்லை என்பதை ஐ.டி. வேலை வாய்ப்புகளில் தமிழகத்திற்க்கு கடைசி இடம் கிடைத்துள்ளது மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அதன் அடிப்படையில் தமிழகத்தில் புற்றீசல் போல 600 பொறியியற் கல்லூரிகள் முளைத்து விட்டன. கல்விக்கு சம்மந்தமில்லாதவர்கள் எல்லாம் தாங்கள் பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் பொறியியல் கல்லூரிகளை திறந்து பெயர் தெரியாதவராய் மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி வருகின்றனர்.

இதே நேரத்தில் டில்லி முதலிடத்தையும் பீகார் மற்றும் ஜார்கண்ட் இரண்டாம் இடத்தையும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள 3000 பொறியியற் கல்லூரிகளில் ஆண்டுக்கு 5 இலட்சம் பொறியியல் பட்டதாரிகள் உருவாகின்றனர். ஆனால் இவர்கள் அனைவரிடமும், நிறுவனங்கள் எதிர்பார்க்கும் கல்வித்தரமோ, திறமையோ இல்லை என்பது தான் வேதனை !

இவர்களில் வெறும் 17.45% பேருக்கு மட்டுமே தகவல் தொழில் நுட்பத் துறையில், நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்த வகையான பட்டதாரிகளும் 70% பேர் கேம்பஸ் இன்டர்வியூ மூலமே தேர்வு செய்யப்ப்ட்டு வருகின்றனர்.

அரசாங்க வேலைக்காக ஒருபக்கம் எம்ப்ளாய்மெண்ட் செய்திதாளையும், எம்ப்ளாய்மெண்ட் அலுவலக வாசலிலும் காத்திருப்போர் ஒரு பக்கம். மறு பக்கமோ பெருகி கொண்டே போகும் பொறியியல் கல்லூரிகளும் அதற்கேற்ப்ப மாணவர் விகிதமும்.

இதற்கெல்லாம் தீர்வு கண்டால் ஒழிய தமிழகத்தில் வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க முடியும்.


3 comments:

வருந்தத் தக்க விஷயம்
விழவேண்டியவர்கள் காதில் விழுமா
விடிவு காலம் வருமா
அருமையான எச்சரிக்கைப் பதிவு

make 100% reservation , then TN will become 1st

Thanx For Ur Feedback.....

Post a Comment