இயற்கையை மாற்றி செயற்கையின் பாதையில் சென்று கொண்டிருக்கும் நாம் தற்போது எந்த வேலையும் தாமாக செய்யாமல் செயற்கையாகிய இயந்திரத்திடம் ஒப்படைத்து விட்டு சோம்பேறியாக இருந்து வருகிறோம். ஆனால் தற்போது துணி துவைக்கும் இயந்திரம் இருந்தும் துவைக்க கூட நேரமில்லாமல் இருக்கும் மக்களுக்காக கண்டுபிடிக்கப் பட்டது தான் செயற்கை ஆடை.
டைட்டானியம் ஆக்சைடை பயன்படுத்தி தற்போது செயற்கை ஆடை முறையை கண்டறிந்துள்ளனர். நைட்ரஜன் ,சில்வர் மற்றும் அயோடின் போன்ற கலவைகளும் இந்த ஆடை தயாரிப்பில் பயன்படுத்தப்படுவதால் அழுக்கை சுத்தம் செய்வதில் பெரும்பங்கு வகிக்கிறது. இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், ஆடையின் மீது வெயில் பட்டவுடனே தானாகவே ஆடையிலுள்ள அழுக்கை
சுத்தம் செய்து கொள்கிறது.
நேரமில்லை நேரமில்லை என்று சொல்லித் திரிபவர்கள் எல்லாம் தற்போது வெளி நாடுகளில் இந்த செயற்கை ஆடைக்குத் தான் மாறி வருகின்றனர். ஆனால் அவசரப்பட்டும் ஆசைப்பட்டும்
செயற்கையை நோக்கி சென்றால் நாளடைவில் நிச்சயம் பின் விளைவுகளை நாம் அனுபவிக்க நேரிடும் அபாயம் உள்ளது. ஏனெனில் டைட்டானியம் ஆக்சைடு கதிரியக்கத்தன்மை வாய்ந்தது அதனை நாம்
பயன்படுத்தினால் விளைவு எப்படி இருக்கும் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை .... அதனை எல்லாம் கதிரியக்கத்தின் பெயரில் நடந்து வரும் பல பெரும்புரட்சிகள் நமக்கு கற்றுக் கொடுத்து விட்டன.
ஆகவே முந்திக் கொள்ளுங்கள் .... புதுமையை நம்பி உங்கள் ஆயுளை இழந்து விடாதீர்கள்.
0 comments:
Post a Comment