விறகடுப்பை பயன்படுத்திய முந்தைய சமூகத்தை நோக்கியே மீண்டும் நாம் படையெடுக்க ஆரம்பிக்கும் காலம் வந்து விட்டது. இந்த நியாயவிலைக்கடையில் பொருட்களை வாங்குவதற்குத் தான் எத்தனை மாற்றங்களை கொண்டு வந்தது நமது அரசு? நல்ல மாற்றங்கள் என்று நம்மை ஆதரவு அளிக்க வைத்து நியாயவிலைக்கடைகளின் நியாயமாக கோரிக்கைகள் என அவர்களை நியாயப்படுத்திக் காட்டிக் கொண்டனர்.
ஆரம்பம் முதலே மாதவருமானத்தின் அடிப்படையில் மனிதர்களை தரம் பிரிக்க ஆரம்பித்தர், மாதவருமானம் 5000-க்கு அதிகாமானோருக்கு ஒரு அட்டை எனவும் 5000-க்கு குறைவானவர்களுக்கு ஒரு அட்டை எனவும் தரம் பிரித்தனர். பின்னர் அந்த அட்டையின் அடிப்படையில் மேல்தட்ட மக்களான 5000 வருமானம் வாங்குபவர்களுக்கு பாதி சலுகைகளை கொடுக்க மறுத்தனர். காரணம் கேட்டால் கீழ்தட்டு மக்களுக்கு அதிகமாக வழங்கி அவர்களை மேம்படுத்துவதற்காகவே இத்திட்டம் என்றார்கள்.
அதோடு மட்டுமா? அதிக அளவு சீனி வாங்கினால் அவர்களுக்கு அரிசி கிடையாது இது என்ன புதிய சட்டமோ? அடுக்கடுக்கான அவலங்களின் பாதையில் தொடர்ந்து..., வாயு சிலிண்டர்கள் வைத்து இருந்தால் அவர்களுக்கு மிகக் குறைந்த அளவு மண்ணெண்ணெய் என்று புதிய சட்டம் பிறப்பிக்க ஆரம்பித்தனர் மீண்டும் விடாத கருப்பாய் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது இந்த ஊழல்.
சென்ற ஆட்சியிலாவது வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப எரிவாயுவான மண்ணெண்ணெய் வினியோகம் செய்யப்பட்டது. வருடத்திற்கு 52கோடி லிட்டர் கண்டிப்பாக விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கினாலும் 400 ரூபாய்க்கு எரிவாயுவின் விலையை கூட்டியதோடு நிறுத்திக் கொண்டது. ஆனால் இந்த ஆட்சியில் வாயு சிலிண்டர்களின் விலை முந்தைய ஆட்சியைவிட கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் மண்ணென்ணெய்யையும் வருடத்திற்கு 48 கோடி லிட்டர் மட்டுமே விநியோகம் செய்து வருகின்றனர்.
மீதமுள்ள 4 கோடி லிட்டர் மண்ணெண்ணெய்யை எங்கே கொண்டு செல்கிறார்களோ தெரியவில்லை? இப்படியே போனால் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் எல்லாம் முற்றிலும் அழிந்து விடும் தருணம் மிக தொலைவில் இல்லை.
1 comments:
நடுத்தர மக்கள் எப்பவுமே பாவப்பட்டவர்கள்தான்.
Post a Comment