இன்னும் சிலர் இருக்கிறார்கள். ஒருவரை தனக்கு மிகவும் பிடித்திருக்கும் அவள் அழகாக இருக்கிறாள் என நினைத்து இருப்போம் ஆனால் அவள் முன்னாடியே அவளை இவளாம் ஒரு ஆளா ஓவரா சீன் போடுறானு சொல்றது. அவள் அழகா இருக்கான்னு நீங்க அவள் கிட்ட சொல்லனும்னு கூட அவசியம் இல்லை ஆனால் நீ ஒரு ஆளுன்னு சீன் போடாதா இது போன்ற வார்த்தைகளால் அவர்களை காயப்படுத்தாதீர்கள்.
பிறர் நம்மை காயப்படுத்துவதாக நினைக்க வேண்டாம் நம்மிடம் எல்லாம் இருக்கு என்பதால் பொறாமைக்காரர்கள் வயிற்று எரிச்சலில் அப்படி பேசி விடுவர். அடுத்தவர் பேச்சுக்கு நாம் இடமளிப்போமாயின் நம்மை நாம் இழப்பதோடு நம் குறிக்கோளினையும் இழந்து விட வேண்டியது தான்.
ஒருத்தன் பல்வகை திறனில் நாட்டம் கொண்டிப்பான், எந்த நேரமும் துறுதுறுன்னு ஏதாவது வேலை செய்து கொண்டிருப்பான் அதனை விரும்பாத சிலர் மட்டுமே அவனை பற்றி புறம் பேசுவார்கள்.
ஒரு பெண் அழகான ஆடை அணிந்து வருகிறாள் என வைத்துக் கொள்வோம், சிலருக்கு மட்டும் நல்லா இருக்குன்னு சொல்ல மனசே இருக்காது இப்படிப்பவர்கள் பொறாமையால் இதெல்லாம் ஒரு ஆடையா நல்ல செலக்ஷனே உனக்குத் தெரியாத என்பார்கள். அவள் பிறர் கூற்றுக்கு இடமளிப்பவளாக இருந்தால் அந்த நேரம் அவள் மனமுடைந்து போய்விடுவாள்.
வாழ்க்கையில் நாம் சின்ன சின்ன விசயங்களுக்கெல்லாம் மூளையிலே இடம் கொடுத்தால் நாளை நமது மூளையே குப்பைத்தொட்டியைப் போல நிரம்பி வழியும். இதனால் பெரிய விசயங்களில் நமது நாட்டம் செல்ல முடியாமலே போய்விடுகிறது.
விமானத்தை கண்டறிந்த ரைட் சகோதரர்களை ஆரம்பத்தில் இந்த உலகம் கேலி செய்தது. அப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பார்கள் என்பது சரியாகத் தான் இருக்கு. வீணா காசையெல்லாம் எப்படி கரியாக்குறாங்க பாருன்னு ரைட் சகோதரர்களை பழி தூற்றினார்கள்.
ஆனால் அவர் எதையுமே காதில் போட்டுக் கொள்ளாமல் வென்று காட்டினார். பிறரின் கருத்துக்கு இடம் கொடுக்காமல் இருந்தால் மட்டுமே நாம் நமது வாழ்க்கையில் இலக்கை அடைய முடியும்.
1 comments:
நல்ல பதிவு! ஒலகம் யாரையும் முழுதாக ஏற்பதில்லை! வெறுப்பதும் அப்படியே!
Post a Comment