Find us on Google+ வளமையான தமிழகத்தை உருவாக்குகிறோம் என்ற பெயரில் வறுமையான தமிழகத்தை உருவாக்கிவிடுவார்கள் போலவே ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Tuesday, 22 November 2011

வளமையான தமிழகத்தை உருவாக்குகிறோம் என்ற பெயரில் வறுமையான தமிழகத்தை உருவாக்கிவிடுவார்கள் போலவே

பெட்ரோல் விலையை குறைக்கச் சொன்னால் அதற்கு எதிராக, அனைத்து தரப்பு மக்களும் செல்லக்கூடிய வாகனக் கட்டணத்தை கூட்டிவிட்டார்களே.


இது எந்த விதத்தில் நியாயம்? பெட்ரோல் போட வசதியில்லாமல் வண்டியே வாங்க முடியாமல் இருந்த அடித்தட்டு மக்களிடையேயும் பெட்ரோல் விலை உயர்வால் வண்டியை மூலையிலே நிறுத்தி விட்டு பேருந்துகளில் பயணம் செய்து கொண்டிருந்த நடுத்தரவாழ் மக்களும் இன்று பெரிய அளவில் துன்பப்பட்டு வருகின்றனர்.


பட்ஜெட் போட்டு வாழ்க்கை நடத்தி வரும் இவர்களைப் போன்றவர்களின் நிலை என்ன? மேல்தட்டு மக்கள் எவருமே பேருந்துகளில் செல்வதேயில்லை அவர்களுக்கு எப்படி தெரியப் போகிறது பேருந்துப் பயணங்கள். அது மட்டுமா?


மக்கள் அதிகமாக உபயோகிக்கும் பொருள் என்ன என்று பார்த்தால் பால் தான். தெருவுக்குத் தெரு இரண்டு மூன்று டீக்கடைகளின் பெஞ்சுகளில் எப்போதும் மக்களைக் காண முடிகிறது. மக்களின் அன்றாடத் தேவைகளில் பால் ஒன்று அவசியமானது அதோடு பேருந்தில் ஏறித் தான் இடம் பெயர வேண்டும் என்ற இன்னொரு கட்டாயத்துடனும் அல்லவா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?


இந்த அவசிய தேவைகளை மக்கள் கடைபிடிக்காமல் இருக்க முடியாது என்ற ஒரே ஒரு காரணத்தினால் இவ்வளவு விலை உயர்வை ஏற்படுத்தி உள்ளீர்களே ! இதனால் தமிழகம் மீண்டும் வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் நேரம் வெகு விரைவில் வந்து விட்டது……….


இதற்கெல்லாம் காரணம் கேட்டால் தமிழகத்தின் கஜானா காலியாக இருக்கிறது என்று காரணம் வேறு சொல்கின்றனர். இங்கே கஜானா காலியாக இருப்பது தமிழகத்தின் சொத்திலா?  அல்லது  5 வருட ஆட்சியில் இழந்த சொத்தை ஒரே வருடத்தில் சுரண்டி எடுப்பதற்கா........?



1 comments:

கட்டண உயர்வு, விலையேற்றம் எல்லாம் தவிர்க்க முடியாததுதான் ஒத்துக்கொள்ளலாம். ஒரே நேரத்தில் இவ்வளவு அதிகமாக உயர்த்துவது எந்த விதத்தில் நியாயம்? மக்கள் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு பத்து அல்லது பதிமூன்று சதவீத அளவிற்கு உயர்த்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இப்போது கூட விலை உயர்வைக் குறைத்து ஆணையிடலாமே! அரசு இதனைச் செயல் படுத்தினால் மக்கள் கஷ்டப்பட மாட்டார்களே!

Post a Comment