உலக வரலாற்றின் பக்கங்களில் ரசாயன நெடி பூசிய செர்னோபில் கொடூரம் அரங்கேறி, 25 வருடங்கள் ஆகிவிட்டன. ரஷ்யாவின் செர்னோபில் அணு உலை விபத்து நடந்து கால் நூற்றாண்டுக்குப் பின்னரும் அந்த இடத்தில் கதிர் வீச்சின் வீரியம் குறையவில்லை. ஆனால், அந்தக் கொடூர அனுபவத்தில் இருந்து இந்த உலகம் எந்தப் பாடமும் கற்றுக்கொள்ளவில்லை... அல்லது கற்றுக்கொள்ள முயலவில்லை என்பது இன்னும் உறையச் செய்யும் அதிர்ச்சி! அதிலும், தமிழகத்தில் கல்பாக்கம், கூடங்குளம் அணு மின் நிலையங்கள்... அவற்றில் கூடுதலாக இன்னும் சில அணு உலைகள் என விபரீதங்களுக்கு...