தமிழகத்தில், 92 உட்பட நாடு முழுவதும் ஆயிரம் ஏ.டி.எம்., களை (தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம்), அமைக்க தபால் துறை திட்டமிட்டுள்ளது என, மத்திய தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர் சச்சின் பைலட் கூறினார்.இதுதொடர்பாக அவர் கூறியதாவது:தபால் துறை மூலம் நாடு முழுவதும் ஆயிரம் ஏ.டி.எம்.,க்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக, 820 தலைமை தபால் அலுவலகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மீதமுள்ள ஏ.டி.எம்.,களை எந்தெந்த தபால் அலுவலகங்களில் அமைப்பது என்பது விரைவில் கண்டறியப்படும். ஆந்திராவில் 100, தமிழகத்தில் 92, உத்திர பிரதேசத்தில்...