இன்று முதல் ஒரு மணி நேரத்தை வங்கதேசம் குறைக்கிறது இன்று இரவு 11 மணியில் இருந்து ஒரு மணி நேரத்தை வங்கதேசம் குறைக்கிறது. இரவு 11 மணி ஆனதும் வங்க தேசத்தில் உள்ள எல்லா கடிகாரத்திலும் மணியை 12 என்று மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது. இதனால் என்ன ஆகும் என்று கேட்கிறீர்களா. ஒரு மணி நேரம் காணாமல் போய்விடும். அப்படித்தானே நினைக்கிறீர்கள். அதுவும் கரெக்ட்தான். ஆனால் இதில் அந்நாட்டுக்கு ஒரு லாபம் இருப்பதாக அது அறிவித்திருக்கிறது. எப்படி என்றால், நாளை காலை நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்பே பள்ளிக்கூடம் போக வேண்டும்,...