Find us on Google+ July 2012 ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

மரணத்திற்கு பின்னால்?

பெரும்பாலானோர் மரணத்திற்கு பின்னர் சொர்க்கம்,நரகம் இருக்கிறது என்று நம்புவர்.

Thursday, 26 July 2012

பாம்பனில் 40 ஆண்டாக இருளில் கிடக்கும் கிராமம்

கண் இருந்தும் குருடர்கள் போல வாழ்ந்து வருகிறார்கள் பாம்பன் கிராம மீனவ   மக்கள்.  இரண்டு மணி நேர மீன் வெட்டையே சகித்துக் கொள்ள முடியாதவர்களாய் நாம் இருந்துகொண்டிருக்கிறோம் ஆனால் இந்த கிராம மக்களோ 24  மணி நேரமும் மின்சாரத்தை கண்ணால் காணாதவர்களாக இருக்கின்றனர்.   இருளிலே பிறந்து , இருளிலே மடிவதென்பது இந்த ஊர் மக்களின் சாபக் கேடா என்ன ? அறிவியல் எவ்வளவோ வளர்ந்து வருகிறது. ஆனால் இப்படியும் இருளில் முழ்கி கிடக்கும் ஓர் கிராமம் இன்றளவும் இருந்து கொண்டே தான் இருக்கின்றது. ராமேசுவரம் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான...

Wednesday, 18 July 2012

நூறு நாள் வேலை திட்டம் பலன் தருமா ?

கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்காக 2005-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு  திட்டம் தமிழகத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு  திட்டமாக 2008-ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்தது.    கிராமப்புற பாமர மக்கள் எல்லாம் நகர்புறங்களை  நோக்கி படையெடுக்க ஆரம்பித்ததனால் தான் இந்த திட்டமே கொண்டுவரப்பட்டது.   இப்புதிய முறையை, ஆந்திர மாநிலத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு பகுதியில், இம்முறை கையாளப்படுகிறது. கர்நாடகா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்கள் இப்போது தான் இம்முறையை...

Sunday, 1 July 2012

விண்வெளிக்கு செல்ல ஆசையா ?

விண்வெளி வீரர்கள் மட்டும் தான் விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டன. நாம், விடுமுறைகளில் அண்டை ஊர்களுக்கு சுற்றுல்லா சென்று வருவது போன்று தற்போது அண்டை நாடுகளில் பேரண்டத்திற்கே சுற்றுலா செல்ல தங்களை  தயார் படுத்திக் கொண்டிருக்கின்றனர்.  விண்வெளிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எக்ஸ்கேலிபர் நிறுவனம் புதிய யுக்தியை கையாள இருக்கிறது. இதுவரை விண்வெளிக்கு செல்பவர்கள் சர்வதேச விண்வெளி நிலையம் வரை மட்டுமே சென்று விட்டு பின் பூமிக்கு திரும்பி விடுவர். வருகிற 2015-ஆம் ஆண்டில் இருந்து...

முதலுதவி மாத்திரைகள், முடிவை நிர்ணயிக்கின்றனவா?

வீட்டின் முதலுதவி பெட்டி வாயை அடைத்தவாறு நீட்டிக் கொண்டிருப்பதும் , வலிக்கு உடனடி நிவாரணம் கொடுக்கிறது என்பதற்காக மருந்துகளின் நண்பனாக எல்லோர் வீட்டிலும் பாராசிட்டமால் மாத்திரைகள் குவியல்களாக தேக்கிவைக்கப்பட்டுள்ளன.  இதன் விளைவு என்ன தெரியுமா? தொடர்ந்து அளவுக்கதிகமாக பாராசிட்டமால் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டுவரும் ஆட்களுக்கு சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். படிப்படியாக உடலில் சேர்ந்தாலும் கூட மருந்தின் அளவு கூடிப்போய் மரணம் ஏற்படலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்....