Find us on Google+ Jeyapriya Online !

Alexa Traffic Rank

மரணத்திற்கு பின்னால்?

பெரும்பாலானோர் மரணத்திற்கு பின்னர் சொர்க்கம்,நரகம் இருக்கிறது என்று நம்புவர்.

இயந்திர மனிதன் தான் இந்தியனோ.......

அரைத்தல் முதல் துவைத்தல் வரை அனைத்துக்கும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வசதி நிறைந்த வாழ்க்கையால் வசந்தம் வருமா ?

பெண் வீட்டுக்காரர்கள் வசதியான மாப்பிள்ளை பார்ப்பதும், மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வசதியான பெண் பார்ப்பதும்,

அன்னிய நாட்டை நாம் படையெடுக்கும் காலம் அருகில் வந்து விட்டது

இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து வந்து தமிழ்நாட்டில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“இணைய நண்பர்களுக்கு எனது சமர்ப்பணம்”

மென் பொருள் துறையில் பணியாற்றி வரும் நான் எனது உயிரிலும் மேலாக நினைக்கும் எனது எழுத்துக்கு முக்கியத்துவம்

Sunday, 30 October 2011

தித்திக்கும் தீபாவளி திகட்டாத தீபாவளி

தீபாவளியைப் பற்றி தீபாவளிக்கு முன்னாடி பேசியிருந்தால் அது வெறும் மாயையாகவே இருந்திருக்கும் என்பதால், தீபாவளியை திகட்ட திகட்ட கொண்டாடி முடித்த என் தமிழ் மக்களுடன் ஒரு ரீவைண்ட் பண்ணி பார்க்க ஆசைப்படுகிறேன். உண்மையில் தீபாவளி என்று தெரியுமா? கையில் காசு இருக்கிறவனுக்கு தினந்தோறும் தீபாவளி தான். தீபாவளி என்றால் நாம் புதுத்துணிகள் எடுக்கிறோம், கையில் காசு இருக்கும் போதெல்லாம் தற்போது புதுத்துணிகள் எடுப்பதிலே தமிழர்கள் பெரும்பாலும் ஈடுபடுகின்றனர். அடுத்ததாக, பலகாரங்கள் செய்து வியர்த்துப் போன வீட்டு மகளிர்களுக்கு விடுதலை அளிக்கும் பொருட்டு ஆர்டர் என்ற பெயரில் இன்று பேக்கரிகளின் ராஜ்ஜியம் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறதல்லவா? மாலை வேளையில் தினந்தோறும் பேக்கரியின் வாசலில் வரிசையில் நிற்கும் இவர்களுக்கு என்ன ஸ்பெசல் இருக்கிறது தீபாவளி பலகாரங்களின் மீது.

அப்படியென்றால் தினந்தோறும் இவர்கள் எல்லாருக்கும் தீபாவளி தானா என்கிறீர்களா? தீபாவளிக்கு முக்கியமே பட்டாசுகள் என்கிறீர்களா? பட்டாசுகளை விரும்பி வாங்கும் குழந்தைகள் தினந்தோறும் கப்யூட்டர் கேம்களில் 3டி அனிமேசனில் வெடி போட்டு வேடிக்கை பார்க்கின்றனர். அப்படியானால் இவர்களுக்கும் தினந்தோறும் தீபாவளி தானா????????????   அப்படியென்றால் உண்மையான தீபாவளி எங்கிருக்கிறது. ஒரு காலத்தில் இருந்தது அப்படிப்பட்ட தீபாவளி. இன்று அது வெரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்பதிலே பலருக்கும் முடிந்து விடுகிறது.

 

    உண்மைத் தீபாவளி என்பது வீட்டில் தீபங்களை ஏற்றி வீட்டை ஒளி பெறச் செய்வதோடு எல்லோர் மனதிலும் ஒளிபடைத்தவனாய் அன்று ஒரு நாள் ஆவது வேறு எல்லா வேலைகளையும் மூட்டைக் கட்டி விட்டு குடும்பத்துடன் ஒன்றாய் இணைந்து எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு குடும்ப பெண்ணுக்கு பலகாரம் செய்வதில் கொஞ்சம் ஒத்தாசையாக இருந்து அந்த பலகாரத்தில் நம்முடைய பங்கும் இருக்கிறது என்பதை காட்டிவிட்டு தன் பெற்றோர் எடுத்துக் கொடுத்த புதுத்துணிகளை போடும் அவசரத்தில் மஞ்சள் வைக்க மறந்து கால் சட்டையை அணியும் போது அங்கிருந்து அம்மாவின் குரல் அடே! சாமிக்கு முன்னாடி புத்தாடையை வைத்து மஞ்சள் வைத்தபின் ஆடையைப் போடு டா.. சரி அம்மா என்று கூறியவன் அவசர அவசரமாக கால் சட்டையை அவிழ்த்து சாமிக்கு முன் வைத்து மஞ்சள் வைத்தது தான் தெரிந்தது அவன் ஆடையுடன் கண்ணாடி முன் நின்று தன் புத்தாடையை ரசித்திக் கொண்டிருப்பான். அடுத்ததாக வீட்டில் செய்த இனிப்பு பலகாரங்களை அண்டை அயலாரிடம் கொடுத்து அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் சொல்வதோடு தன் புத்தாடையைப் பற்றி அவர்கள் கூறும் கமெண்டுகளில் நாம் கரைந்து விடுவோம். இறுதியாக சீனி வெடி வெடிக்கும் போது அப்பா பின்னாடியே வந்து பாத்து டா பாத்து போடு என்று சொல்லி கொண்டிருக்கும் தருணம் அம்மாவின் குரல் மணி என்ன ஆகுது வெடி போடுற ஆர்வத்துல சாப்பாட்டையே மறந்தாச்சு என சொல்ல காலை சாப்பாடு இனிதே முடியும் தருணம் அண்டை அயலார் வீட்டு பலகாரங்களும் வீட்டிற்கு வந்து குமியும் அதையும் ஒரு கட்டு கட்டி விட்டு தொலைக்காட்சி முன் அமர்ந்த சற்று நேரத்தில் அன்னை அசைவ உணவையும் சமைத்து விடுவாள்.

ஒரு வழியாக ஆனந்தப் பூரிப்பில் அதையும் ஒரு கட்டு கட்டி விட்டு சினிமாவுக்கு கிளம்பி போய் 4 மணி நேர மேட்னி சோவை கண்டு மகிழ்ந்து விட்டு

அப்படியே மாலை வந்ததும் பக்கத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று வழிபாடுகளை முடித்துவிட்டு இரவிலே வான வேடிக்கைகளை வானில் பார்த்து ரசித்து விட்டு அப்பா தீப்பட்டி மத்தாப்பை உறசி கொடுக்க, தம்பி புஸ்வானம் வைடா , அம்மா உடனே அய்யோ கையை சுட்டுகிறப் போறான் கம்பி மத்தாப்பை புடுச்சி கொடுங்கன்னு சொல்ல ஆனந்தத்துடன் உறங்கி தீபாவளியை முடித்து வைப்பதிலே உண்மையான சந்தோஷம் இருக்கிறது.

Thursday, 27 October 2011

"விதியையே மதியால் வென்றவர்கள்"


சென்னையில் கட்டிட வேலை செய்து வரும் பெண் ஒருவர் தன் குழந்தைகளுடன் தாம்பரம் இரயில் நிலையத்தைக் கடக்கும் போது, கடைசி தண்டவாளத்தை கடக்கும் முன்பு இரயில் அருகில்

வந்து விட்டதால் பதட்டத்தில் என்ன செய்வதென்பது புரியாமல் தன் மகனையும் மகளையும் தண்டவாளத்தில் படுக்க வைத்துவிட்டு தானும் குழந்தைகளை அழுத்தி அவர்கள் மேலே படுத்துக் கொண்டார். 

இரயில் கடந்து சென்றதும் எழுந்து வந்தனர். இது போன்ற அதிசயம் இதுவரை நடந்ததே இல்லையாம். மின்சார இரயிலுக்கும் தரைக்கும் இடையே அரை அடி தூர இடைவெளி மட்டுமே இருக்கும். 

இருப்பினும் இவர்கள் காயமின்றி உயிர் பிழைத்தது இவர்களின் விதி தான் என்பது வியக்கவைத்தது. விதியையே மதியால் வெல்வது இது தானோ............

Wednesday, 26 October 2011

" பெட்ரோல் விலை தான் நீண்டு கொண்டே போகிறதென்றால் பெடரல் வங்கியின் கிளையும் அல்லவா நீண்டு கொண்டிருக்கிறது"


ஒரு பக்கம் குடிசையெல்லாம் கூரையாகி கொண்டிருக்கிறது. மறுபக்கம் விளை நிலங்கள் எல்லாம் ரியல் எஸ்டேட்டுகளாக மாறி வருகின்றன.
 
இந்த ஆண்டு பெடரல் வங்கியின் 66வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு 66 கிளைகளை இந்தியா முழுவதும் ஆரம்பித்துள்ளன. ஏற்கனவே 823 கிளைகளைக் கொண்ட பெடரல் வங்கி சென்னையில் மட்டும் மேலும் 41கிளைகளை தொடங்கி 100 ஆக உயர்த்த ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கின்றன.     
  
  சென்னையில் பெடரல் வங்கியின் மண்டல தலைவர் டி.கே.பழனியப்பன் கூறுகையில் 1000 கிளைகளை வெற்றிகரமாக அமைத்து 1000 கோடி லாபம் அடைவதே அவர்களின் எண்ணம் என்கிறார்.
     
      “உயர்ந்தவர் உயர்ந்து கொண்டே போகிறார்கள்
      தாழ்ந்தவர்கள் இன்னும் தாழ்ந்து கொண்டே அல்லவா போகிறார்கள்.”

இந்த நிலை என்று மாறும்?   இந்தியா என்று வல்லரசாகும்?

Tuesday, 25 October 2011

"தமிழ் குடிமகனுக்கு ஒரு சல்யூட்"


நடந்து முடிந்த சட்டமன்ற கவுன்சிலர் தேர்தல் எல்லா ஊர்களையும் ஒரு உழுக்கி உழுக்கி விட்டது. அந்த தேர்தலுக்காக அமெரிக்காவில் இருந்து கிளம்பி வந்து தன்னுடய வாக்கினை இந்த ஆண்டு பதித்துள்ளனர் பலபேர். 
 
அம்மி மிதித்து அருந்ததி பார்க்காமல், தாளி கட்டிய கையோடு ஓட்டு சாவடியில் வரிசையில் நின்று ஓட்டளித்த தம்பதிகளை நினைக்கும் போது மனம் நெகிழ்கிறது. 

அதோடு மட்டுமல்லாமல் 89 வயது மூதாட்டியும் தனது மகன் உதவியுடன் ஓட்டு போடுவதற்கு வந்தது மிகவும் பெருமிதமாக உள்ளது. 

நடக்க கூட முடியாத நிலையில் உள்ள 97 வயதானவர் ஓட்டுப் போட ஆசைப் பட்டதால் அவரது மகன் அவரை தூக்கிச் சென்று வரிசையில் நின்று ஓட்டழித்த காட்சி மெய் சிலிர்க்க வைத்தது.

Monday, 24 October 2011

காதல் என்பது கனவு மாதிரி

இன்றைய காதலர்களை நினைத்தால் அழுவதா, சிரிப்பதா என்றே தெரிய வில்லை. பார்த்ததும் காதல், பார்க்க பார்க்க காதல், ஏன் பார்காமலே    கூட காதலியுக்கிறார்கள். இவர்கள் காதல் எல்லாம் இறுதியில் கல்யாணத்தில முடிகிறதா என்ன ?

  காதலுக்கான உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா ?  எதிர் பாராமல் வருவது தான் காதல். ஒரு பெண்ணை பார்த்ததும் மனதில் பட்டாம் பூச்சி ரீங்காரம் அடிக்கும் அந்த நொடி அவள் நமக்கு தேவதை அவளை ஒரு வழியாக காதல் வலையில் சிக்க வைத்த பின்னர் ஒரு மூன்று மாதம் மிக சுவாரஸ்யமாக பனி துளி மேலே நடந்து செல்வதை போன்று இருக்கும். சுற்றி என்ன நடக்குது என்றே தெரியாத ஒரு மாய வலைக்குள் அடைக்கப் பட்ட சிலந்தியைப் போன்று காதல் படுத்தும் பாடு ஒரு சுமையான சுகம். ஆசை அறுவது நாள் மோகம் முப்பது நாள் என்று சும்மாவா சொன்னார்கள் முன்னோர்கள். அப்படி என்றால் எந்த காதலர்களும் இணைவது இல்லை என்கிறீர்களா ? நிச்சயம் நான் அப்படி சொல்ல வர வில்லை. உண்மைக் காதல் காலத்தால் அழியாத சுவடுகளாக விளங்கும்  தாஜ்மகாலை போன்றது தான். எதையும் எதிர் பாக்காமல் வருவது தான் காதல், எதிர் பாராமல் வந்த காதலில், நாம் எதிர்பார்க்கும் குணங்கள் காதலியிடமோ அல்லது காதலனிடமோ இல்லையென்றால் உடனே அந்த காதல் தோற்று போகிறது. இருவரில் ஒருவர் விட்டுக் கொடுத்து வந்தால் மட்டுமே அந்த காதல் கல்யாணம் வரை போகிறது. ஆகவே காதலை கனவாக நினைப்பவர்கள் தோற்றுப் போகிறார்கள். காதல் ஒரு கணம் தெரியாத சுமை. அதை சுகத்துடன் தூக்கி செல்லுங்கள் உங்கள் காதல் கண்டிப்பாக வெற்றி அடையும்.



 

Friday, 21 October 2011

Airtel ,Idea Free Mobile Office Trick


1.உங்கள் கணினியில் Your Freedom மற்றும் Java வை நிறுவிக்கொள்ளுங்கள்.

2.அதற்கான சுட்டி கீழே கொடுக்கபட்டுள்ளது

  http://www.your-freedom.net  and sign up for free account.

Download Your-Freedom client  and download java.

Install Your-Freedom and Java in your PC



3.முதலில் உங்கள் மொபைல் யை Nokia Pc Suite மூலம் இணையுங்கள்.


4.பிறகு Your freedom யை Open பண்ணுங்கள்.






5.அதில் Configure என்ற Option இருக்கும்.அதை Click செய்யுங்கள்.


6.ஒரு புதிய Window Open ஆகும்.அதில் Account Information இல் உங்கள் கணக்கை பதிவு செய்யுங்கள்.




7.பிறகு Server Connection என்ற Tab இருக்கும்.அதை Click செய்யுங்கள்.

8.Tweaks என்ற Option யை Select செய்து India Bharati  யை select பண்ணுங்கள்.

9.Connection Mode இல் UDP யை Select செய்யுங்கள்.

10.பிறகு Wizard என்ற பட்டனை Click செய்யுங்கள்.


 
11.அதன் பின்னர் பல Server கள் இருக்கும் அதில் ஏதாவது ஒன்றை Select பண்ணுங்கள்.பிறகு Next யை Click செய்யுங்கள்.




12.பிறகு Mozilla FireFox யை ஓபன் செய்து அதில் உள்ள Ip யை மாற்றுங்கள் 


13.Ip  127.0.0.1  Port 53 




Any Queries?


Post Ur Comment...

கீபோர்ட் விளையாட்டு

உங்கள் கணினியில் இருக்கும் கீபோர்ட் இல் இருக்கும் விளக்கை கொஞ்சம்
நடனம் ஆடவைத்து வேடிக்கை பார்ப்போம்.(Caps,Num,Scroll Lock).

கீழே உள்ள Code யை Copy செய்து Paste செய்யுங்கள் ஒரு Note Pad இல் ,

Set wshShell =wscript.CreateObject("WScript.Shell")
do
wscript.sleep 100
wshshell.sendkeys "{CAPSLOCK}"
wshshell.sendkeys "{NUMLOCK}"
wshshell.sendkeys "{SCROLLLOCK}"
loop

பின்னர் kb.vbs என்று save செய்யுங்கள்.
பிறகு open செய்யுங்கள் .


உங்கள் keyboard இன் விளக்கை வேடிக்கை பாருங்கள்.


To remove:
Open task manager and end the process. Its called something like WSCRIPT.

உங்களுக்கான ஒரு Folder Lock Program யை உருவாக்குங்கள்

1.முதலில் Note Pad யை Open பண்ணுங்கள்

2.பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள Code யை Copy Seythu Paste செய்யுங்கள்.

cls
@ECHO OFF
title Folder Locker
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST Locker goto MDLOCKER
:CONFIRM
echo Enter password to lock folder or for cancel press N
set/p "cho=>"
if %cho%==XXXX goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock folder
set/p "pass=>"
if NOT %pass%==XXXX goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Locker
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Locker
echo Locker created successfully
goto End
:End

4.XXXX என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான கடவுச்சொல்லை கொடுங்கள்.

5.பிறகு Lock.bat என்று save செய்யுங்கள் .

காஞ்சனா படம் பார்த்து விட்டு கைதட்டி விட்டு வந்தால் மட்டும் போதுமா?


பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலா-வில் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி நடை பெற்றது. திருநங்கைகளை கேவலமாகப் பார்க்கும் நம்ம ஊர் மக்களுக்கிடையே அவர்களையும் மதித்து அவர்களும் அழகானவர்கள் தான் என உலகறியச் செய்த பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு ஒரு வாழ்த்துக்கள்.
 
  சினிமாவில் காஞ்சனா படம் பார்த்து விட்டு படக்கதை சூப்பர், லாரன்ஸ் நடிப்பு பிரமாதம் என்று சொல்வதோடு மறந்து விடும் நம்ம ஊர் மக்கள், 

அந்த கதை சூப்பர் என்று நிச்சயம் சொல்லக் கூடாது. ஒரு விசயம் நமக்கு பிடித்திருக்கிறது என்றால் அதை செயலில் அல்லவா காட்ட வேண்டும்?

எத்தனை பேர் படம் பார்த்து விட்டும் திருநங்கைகளை அவமத்துள்ளனர். இவர்கள் 150 ரூபாய் கொடுத்து எதற்கு படம் பார்க்க வேண்டும்?? 

பிலிப்பைன்ஸ் நாட்டைப் போல திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி நடத்தாவிட்டாலும் சரி, திருநங்கைகளையும் ஒரு மனிதனாக நினைத்து
அவர்களை மதிக்கக் கற்றுக் கொள்வோம்....

Thursday, 20 October 2011

தண்டவாளத்திலே ஒரு விமானப் பயணம்


அதிவேக இரயில்கள் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள்.  சீனா, ஜப்பான், பிரான்ஸ் போட்டி போட்டுக் கொண்டு அதிவேக இரயில்களை இயக்கி வருகின்றன. இதில் சீனாவை சொல்லவே வேண்டாம். 1327கிலோமீட்டர் தூரத்தை 5 மணிநேரத்தில் கடக்கும் அதிவேக இரயில் தற்போது சீனாவில் இயங்கி வருகிறது.

      இன்று 1327கிலோமீட்டர் தூரத்தை 3 மணிநேரத்தில் கடக்கும் இரயிலை கண்டறிந்துள்ளனர். இந்த அதிவேக இரயில் பயணத்தால் சீனர்கள் எல்லாரும் விமானத்தில் பயணம் செய்வதைப் போல் உணருவதாக சொல்கிறார்கள்.

      மக்கள் தொகையில்  முதலிடம் பிடித்துள்ள சீனா, இன்று தொழில் நுட்பத்திலும் முன்னேறி வருகிறது. ஆனால் நம்மூரில் 3 மணி நேரத்தில் 1327கிலோமீட்டர் வேகம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை . சரியான நேரத்தில் இரயில் வந்தாலே போதுமே....

     தண்டவாளத்தில் தடகளப்போட்டியே நடத்தி விடுவர் நம்ம ஊர் மக்கள், அவ்வளவு தாமதமாக அல்லவா இரயில் வருகிறது. ஆனால் அண்டை நாடான சீனாவில் அனல் பறக்கும் வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது..

 மக்கள் தொகயில் சீனாவையே முந்து விடும் அளவிற்கு வளர்ந்து வரும் நாம் ஏன் தொழில்நுட்ப வளர்ச்சியில் அந்த போட்டியை காமிக்க கூடாது?