Find us on Google+ லண்டன் ஒலிம்பிக்கில் வெறும் 76 இந்தியர்கள் தானா? ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Sunday, 17 June 2012

லண்டன் ஒலிம்பிக்கில் வெறும் 76 இந்தியர்கள் தானா?

120 கோடி இந்திய மக்கள் தொகையில் வெறும் 76 பேர் தான் ஒலிம்பிக்கிற்கு தகுதி படைத்துள்ளனர் என்பது நமது இந்திய விளையாட்டு வீரர்களின் திறமையை தவிடு பொடியாக்கியதைப் போன்று உள்ளது.
இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு சீனாவில் நடந்த ஒலிம்பிக்கோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் சற்று கூடுதல் தான் .  சீன ஒலிம்பிக்கில் 56 பேர் தேர்வாகியிருந்தனர். இந்த ஆண்டு நடக்கவிருக்கும் ஒலிம்பிக்கிற்கு ஆண்கள் 56 பேரும் பெண்கள் 20 பேரும் தேர்வாகியுள்ளனர்.
இருப்பினும் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பல பதக்கங்களை வென்று குவித்தவர்களால் கூட ஏன் ஒலிம்பிக்கில் தேர்வாக முடியவில்லை என்பது இன்றளவும் ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது.
அப்படியே தேர்வாகினாலும் ஒரு சிலர் மட்டுமே பதக்கங்களைப் பெறுகிறார்கள். அதிலும் வெண்கலப் பதக்கங்களே முதலிடம் பிடிக்கிறது. அத்திப் பூத்தார் போல் எப்போதாவது ஓரிரு தங்கத்துடனே நாம் சாதனை படைக்கிறோம்.  
இத்தனை கோடி மக்கள் தொகையில் ஒரே ஒரு தங்கம் பெறுவதற்கான வீரர் மட்டுமே உள்ளாரா என்ற கேள்விக்கு இன்றளவும் சரியான பதில் கிடைக்கவில்லை.
சிறுவயது முதல் வாலிபவயது வரை விளையாட்டில் ஆர்வம் காட்டாத இளைஞர்களே நம் இந்தியாவில் இல்லை எனலாம்.  பெண்களின் விளையாட்டு திறனுக்கு ஓரளவிற்கு மேல் முட்டுக்கட்டை போடும் மாநிலங்களே இன்றளவும் இருக்கத்தான் செய்கின்றன.
விளையாட்டில் ஆர்வம் இருந்தும் ஊக்கப்படுத்த பெற்றோரும் இருந்தும் விளையாட மைதானங்கள் சரிவர இல்லாமமையால் இன்னும் பல
வீரர் / வீராங்கனைகளை நாம் இழந்து வருகிறோம்.
அந்நிய நாடுகளில் ஏதுவான தகவமைப்பு அவரவர்  விருப்பத்திற்கும் குறிக்கோளுக்கும் ஏற்றார் போல அமைந்திருப்பது அவர்களின் ஒலிம்பிக் வெற்றிக்கு மிகப்பெரிய அடித்தளமாக உள்ளது.
இந்தியாவிலும் அதே தகவமைப்பும், பெண் அடிமைக் கட்டுப்பாடும் தகர்ந்தால் நிச்சயம் நம்மாலும் பல தங்கங்களைப் பெற முடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
வளர்ந்து வரும் கலாச்சாரம் நிச்சயம் நம் இந்தியாவின் தகவமைப்பை மாற்றிக்காட்டுமாதலால் நிச்சயம் அடுத்த இரண்டு மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியர்கள் வாங்கப் போகும் தங்கம் பன்மடங்கு அதிகரிக்கப் போகிறது.








                                                   

0 comments:

Post a Comment