தண்ணீருக்காக கர்நாடகாவிடம் கையேந்தி நின்ற நம் தமிழர்கள் தற்போது காய்கறிகளுக்காவும் கர்நாடகா மற்றும் ஆந்திராவிடம் கையேந்தி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இதற்கெல்லாம் என்ன காரணம் ?
தற்போது தமிழகத்தில் விளைநிலங்கள் எல்லாம் ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றப்பட்டு வரும் நிலையில் விளைவிக்க இடம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.
தினந்தோறும் கர்நாடகாவில் இருந்து 5000 டன் காய்கறிகள் சென்னை கோயம்பேடு சந்தைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் ஆந்திராவில் இருந்தும் 800 டன் காய்கறிகள் தினந்தோறும் இறக்குமதி செய்யப்படுகின்றன.
ஒரு வழியாக எவ்வளவோ போராடி காவிரி குடிநீர் பிரச்சனையில் நாமும் கர்நாடாகவும் சமரசம் ஆகிவிட்டோம்.
தற்போது நாங்கள் தான் மொத்த காய்கறியும் தருகிறோமே இனி எதற்கு தேவைக்கு அதிகமான தண்ணீர் உங்களுக்கு? -என கர்நாடக அரசு இதையும் ஒரு காரணமாக கொண்டு தமிழகத்திற்கு தண்ணீர் தரமறுக்காமல் இருக்க நாம் தான் முன்னெச்செரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
ரியல் எஸ்டேட் தொழிலில் பணம் அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக பணத்தையே
உண்டு நம்மால் வாழ்ந்துவிட முடியுமா?
இந்த நிலை நீடித்தால் தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள்.......
1 comments:
மண்ணை விற்பதும் - சொந்த பெண்ணை விற்பதும் தமிழ்கத்தின் தலைவிதி ஆகிவிட்டது ஒன்றும் சொல்வதற்கில்லை ... !!!
தமிழ்நாடு பூலோக சொர்க்கமாகிக் கொண்டிருக்கின்றது என்று நினைக்கின்றேன் !
Post a Comment