2009 ஆம் ஆண்டில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்
பெற்ற முகேஷ் அம்பானியின் அந்த ஆண்டு
வருமானம் 14 கோடி மட்டுமே.
ஆனால் அதே ஆண்டில் உலகம் அறியாத பணக்காரர் பட்டியலில்
ஒளிந்து கொண்டிருந்தவர் மதுரை இளைய ஆதீனம் நித்தியானந்தா தான்.
2009-ஆம் ஆண்டில் மட்டும் இவருடைய ஓராண்டு வருமானம் 90
கோடி. அதுவும் கிடைத்த ஆவணங்களின் மூலம் அலசி பார்த்ததிலே 90 கோடி என்றால் அதையும்
மீறி எவ்வளவு சொத்து சேர்த்திருப்பாரோ தெரியவில்லை.
இவருடைய மொத்த சொத்து மதிப்பு 2ஜி வழக்கில் கொள்ளை அடித்த
பணத்தை விட அதிகமாகும் போல.
இந்த பணத்தையெல்லாம் அவர் எப்படி சம்பாதித்தார் என்று
பார்த்தால்
21 நாள் தியான பயிற்சி சொல்லி கொடுப்பதற்கு, ஆள்
ஒருவரிடம் 3 இலட்சம் ரூபாய் கட்டணம் வசூலிப்பாரம் அமெரிக்காவில்.
ஒருவரிடம் 3 லட்சமா என்கிறீர்களா ? இங்கே
இந்தியாவில் மூளையை கசக்கி மென்பொருளிலே வேலை பார்ப்பவனுக்கு வருட சாம்பளமே 3
இலட்சம் தானே கிடைக்கிறது. அப்படி
இருக்கையில் அமெரிக்கர்களின் ஒரு மாத சம்பளத்தைக் கொடுத்து அவர்கள் தியானம் கற்க
முன்வருகிறார்கள்.
தியானப் பயிற்சி மட்டுமல்லாது சாமி சிலைகள் மற்றும்
ருத்ராட்ச மாலைகள் செய்தும் அதனை வெளிநாடுகளில் அதிக விலைக்கு விற்று வருகிறார்.
இன்னொரு பக்கம் அவருடைய சீடர்கள் பலர் மூலமும் அவருக்கு
பணம் குவிந்து கொண்டே தான் இருக்கிறது.
சுவிஸ் வங்கியில் இருப்பது கருப்பு பணம் என்றால்
நித்தியானந்தாவின் மொத்த சொத்து மதிப்பை எந்த கணக்கில் சேர்ப்பது?
0 comments:
Post a Comment