எரியும் அடுப்பில் இருந்து ஒடும் வாகனம் வரையிலும்
எரிபொருளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றன. இந்த நிலையை எப்படி நடுத்தரவர்க்க குடிமகனால்
சமாளிக்க முடியும்.
அரசின் கல்லாப்பெட்டியை நிறைப்பதற்கு நடுத்தரவர்க்க
குடிமகன்கள் தான் கிடைத்தோமா? இதற்கு மாற்று வழி
யோசிக்கலாமே !
தினமும் எந்த கடை வெறிச்சோடி கிடக்கிறதோ இல்லையோ ஆனால் இந்த
டாஸ் மார்க் கடைகள் மட்டும் வெயிலானாலும்,
குளிரானாலும் விடுமுறையே இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டில்
மட்டும் 6804 மதுபானக்கடைகள் உள்ளன.
இவற்றின் மூலம் கிடைக்கும் ஒரு நாள் வருமானம் மட்டும்
கோடியை தொட்டு விடுகிறது. இப்படிப் பட்ட குடிமகன்கள் குடிக்கும் குடிபானத்தின்
விலையை ஏற்றம் செய்தாலே போதும் நாட்டின் கல்லாவையும் நிரப்பி விடலாம்.
விலை உய்ர்வினால் சில குடிமகன்களையும் நல் வழிப்பாதையில்
கொண்டு சென்று விடலாம். இதற்கு பெயர் தான்
ஒரே கல்லில் இரண்டு மாங்காவோ??
0 comments:
Post a Comment