Find us on Google+ November 2011 ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

மரணத்திற்கு பின்னால்?

பெரும்பாலானோர் மரணத்திற்கு பின்னர் சொர்க்கம்,நரகம் இருக்கிறது என்று நம்புவர்.

Wednesday, 30 November 2011

ரெயின் ரெயின் கோ அவே

மழை வந்தாலும் வந்துச்சு எப்படா மழை நிக்கும்னு தோனுதுல.....  மழையே வா வா-ன்னு  கூப்பிட்டு கழுதைக்கு கல்யாணம் பன்னி வச்சாலும் மழை வராது. ஆனால் இந்த ஆண்டு என்னவோ ஊத்து மழை கொட்டுது. எப்படியோ ஒரு பக்கம் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும் மறு பக்கம் நல்ல விளைச்சல் கிடைத்தால் போதும்.     ஆனால் மழை இல்லாமல் நாம் எவ்வளவோ நாள் கஷ்டப்பட்டிருக்கிறோம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரையிலும் மழை இல்லாமல் பஞ்சத்தில் அடிபட்ட காலங்கள் எல்லாம் இருந்தன. ஆகவே தற்போது வர்ணபகவான் நமக்கு அருள் பாலித்ததாக நினைத்து...

Tuesday, 29 November 2011

மாருதிக்கே இந்த மாற்றமா?

ஆரம்பத்தில் இருந்தே கார்கள் என்றால் அதில் முன்னனியைப் பிடிக்கும் நிறுவனங்களுள் மாருதியும் ஒன்று. பார்ப்பதற்கு அழகாகவும் மினி சைசில் இருக்கும் மாருதிக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வந்தது. பெட்ரோலால் இயங்கக் கூடிய கருவிகளைக் கொண்டு செய்யப்பட்ட மாருதி கார்கள் தற்போது டீசல் என்ஜின்களுக்கு மாற்றப்படுகின்றன. காரணம் என்ன வென்று பார்த்தால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை மாருதிகள் பெருமளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது தான். இதற்கெல்லாம் ஒரே காரணம் பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது தான். பெட்ரோலால் இயங்கும் இன்ஜின்...

பிறர் கூற்று புறங்கூற்று

சிலருக்கு அடுத்தவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதே பிடிக்காது, வகுப்பில் முதல் ரேங்க் வாங்குபவர்களை சிலருக்குப் பிடிக்கவே பிடிக்காது ஆசிரியர் அடிக்கடி அந்த மாணவனை மட்டும் புகழ்ந்து பேசுவதை  இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவர்களை பாராட்டவில்லை என்றாலும் கூட பரவாயில்லையே ஆனால் அவர்களை பழிக்காமலாவது இருக்கலாமே! இன்னும் சிலர் இருக்கிறார்கள். ஒருவரை தனக்கு மிகவும் பிடித்திருக்கும் அவள் அழகாக இருக்கிறாள் என நினைத்து இருப்போம் ஆனால் அவள் முன்னாடியே அவளை இவளாம் ஒரு ஆளா ஓவரா சீன் போடுறானு சொல்றது. அவள் அழகா இருக்கான்னு நீங்க அவள் கிட்ட சொல்லனும்னு...

Monday, 28 November 2011

பேரம் பேசி வாங்குவதில் ஒரு சந்தோசமா?

பஞ்சத்தில் அடிபட்டு கிடக்கும் பாமர மக்கள் ஏதோ வயிற்றுப் பிழைப்புக்காக தெருவோரங்களில் பூக்கடை நடத்தி வந்தால் அவர்களிடம் போயி பேரம் பேசி விலையை குறைக்க வைத்து பூவை வாங்கி வைப்பதில் நம்ம ஊர் காரர்களுக்கு அவ்வளவு ஒரு சந்தோசம். இதை பெருமையாக வேற எல்லோரிடமும் சொல்லிக் கொள்வது. இதோடு மட்டுமா தள்ளுவண்டிகளில் காய்கறி விற்பவர்களோ அல்லது பிளாஸ்டிக் பொருள் விற்பவர்களோ வந்து விட்டால் போதும் அந்த தெருவில் உள்ள எல்லா பெரியவர்களும் தள்ளுவண்டியை சுற்றி கூடிக் கொண்டு அசலை விட குறைந்த விலைக்கு பேரம் பேசி வாங்கி விடுவர். அதில் அந்த தெருக்காரர்களுக்கு அவ்வளவு ஒரு...

வசதி நிறைந்த வாழ்க்கையால் வசந்தம் வருமா ?

பெண் வீட்டுக்காரர்கள் வசதியான மாப்பிள்ளை பார்ப்பதும், மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வசதியான பெண் பார்ப்பதும், நடுத்தர குடும்ப பெண் வசதி படைத்த பையனை பார்த்து காதலிப்பதும், நடுத்தர குடும்ப பையன் வசதி படைத்த பெண்ணை பார்த்து காதலிப்பதும் இன்றைய சூழலில் அதிகரித்து விட்டது. இதற்கெல்லாம் காரணம் என்ன? பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பணக்கார வீட்டில் சம்பந்தம் முடிக்க விரும்புவர். அவர்களின் எதிர்பார்ப்பு நியாயமானது தான். ஆனால் வசதி இருந்தால் மட்டும் நாம் நினைக்கும் வசந்தமான வாழ்க்கை வந்து விடுமா என்ன?...

Saturday, 26 November 2011

வேற்று கிரகங்களை வேடிக்கை பார்க்க போகலாமா?

பூமித்தாயே பொறுக்க முடியாமல் பிளவடைந்து பூகம்பத்தை உண்டாக்கும் அளவுக்கு பூமியின் பாரம் தாங்க முடியாமல் மக்கள் நெரிசல் அதிகமாக உள்ளது. இந்தப் பிரச்சனையைப் போக்கவே வேற்று கிரகங்களுக்கு மக்களை வழியனுப்ப வாய்ப்புகளை எதிர் நோக்கியுள்ளனர். கிரகங்களில் இரண்டாவது பெரிய கிரகமான சனி கிரகத்தைப் பற்றி ஆராய காசினி செயற்கைக்கோளை அனுப்பி தோல்வி அடைந்தோம்.மீண்டும் சிறிய கிரகமான பூளூட்டோ கிரகத்தைப் பற்றிய ஆராய நீயூ ஹாரிசான் என்ற செயற்கைக்கோளை அனுப்பி மறுபடியும் தோல்வி அடைந்தோம். அடுத்த படியாக மீடியம் சைசில்  உள்ள செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஆராய 1940-ஆம்...

Friday, 25 November 2011

கற்காலத்தை நோக்கி மீண்டும் படையெடுப்பா?

அனைத்து நாடுகளும் வளர்ச்சியின் பாதையில் வல்லரசாக வளர்ந்து கொண்டிருக்கும் வேளையில் நாம் மட்டும் கற்காலத்தை நோக்கி படையெடுக்க தயாராக இருக்கிறோம். என்ன நண்பர்களே புரியவில்லையா? கற்காலத்தில் நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? மின்சாரமே இல்லாத இருண்ட உலகத்தில் தங்களது மொத்த வாழ்க்கைப் பயணத்தையும் கடந்தனர். நமது தமிழகத்தின் தற்போதைய நிலை என்ன? எல்லாம் இருந்தும் இல்லாதது மாதிரி தான். தற்போதைய  பல மணி நேர மின்வெட்டினால் நாமும் இருண்ட உலகில் வாழ அடியெடுத்து வைத்துள்ளோம். இன்றைய இயந்திர உலகில் "சம்சாரம் இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம் ஆனால் மின்சாரம்...

Tuesday, 22 November 2011

வளமையான தமிழகத்தை உருவாக்குகிறோம் என்ற பெயரில் வறுமையான தமிழகத்தை உருவாக்கிவிடுவார்கள் போலவே

பெட்ரோல் விலையை குறைக்கச் சொன்னால் அதற்கு எதிராக, அனைத்து தரப்பு மக்களும் செல்லக்கூடிய வாகனக் கட்டணத்தை கூட்டிவிட்டார்களே. இது எந்த விதத்தில் நியாயம்? பெட்ரோல் போட வசதியில்லாமல் வண்டியே வாங்க முடியாமல் இருந்த அடித்தட்டு மக்களிடையேயும் பெட்ரோல் விலை உயர்வால் வண்டியை மூலையிலே நிறுத்தி விட்டு பேருந்துகளில் பயணம் செய்து கொண்டிருந்த நடுத்தரவாழ் மக்களும் இன்று பெரிய அளவில் துன்பப்பட்டு வருகின்றனர். பட்ஜெட் போட்டு வாழ்க்கை நடத்தி வரும் இவர்களைப் போன்றவர்களின் நிலை என்ன? மேல்தட்டு மக்கள் எவருமே பேருந்துகளில் செல்வதேயில்லை அவர்களுக்கு எப்படி தெரியப்...

Monday, 21 November 2011

மல்கோவாவின் மாந்திரீகம்

மாங்காய் சீசனில் மாணவர்களின் கொண்டாட்டமும் அதிலும் மாங்காய் மரம் எங்கேனும் கண்ணில் பட்டால் விட்டு வைப்பார்களா? திருட்டு மாங்காய் தான் என்றும் சுவை தரும். மாங்காயால் மாணவர்களுக்கு மட்டுமா கொண்டாட்டம்? பெரியவர்களும் மாங்காய்களை ஊறுகாயாக்கி சீசாக்களில் அடைத்து உண்பதே இந்த சீசனின் ஸ்பெசாலிட்டி தான். "மா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும்" என்ற பல மொழியே உள்ளதல்லவா.....?    பிஞ்சு பழுத்து பழமாகியதும் மாம்பழம் மணத்திலே நம்மை மனம் கவிழ வைக்கிறது. மாம்பழம் என்றாலே எல்லோருக்குள்ளும் ஒரு தித்திக்கும் சுவை நம்மை அறியாமலே வந்து போகிறது....

Saturday, 19 November 2011

வெளிநாடுகளின் கழிவு நமது நாட்டில் மலிவு

செல்போன்கள் இன்று மனிதனின் ஆறாவது விரலாகத் தான் செயல்பட்டு வருகின்றன. நாம் தனியாக இருந்தாலும் தனிமையில் நம்மை தவழவிடாமல் நண்பனாக தோள் கொடுக்கும் ஒரு அன்புத் தோழன் தான்  செல்போன்.           சூரியன் பிறந்து சந்திரன் மறைவது வரை இன்று வீட்டுக்கு வீடு செல்போன்களின் சிணுகல்கள் தான் அதிகம். ஐந்து வயது குழந்தைகள் கூட தனியாக தங்களுக்கென்று ஒரு செல்போன்களை பயன்படுத்துகின்றன.     இந்த நிலையில் நாம் கவனிக்க வேண்டியவை செல்போன்களின் தரத்தை மட்டுமே. செல்போன்களின் அளவுக்கதிகமான வரவேற்பினால் மக்கள்...

Friday, 18 November 2011

மரணத்திற்கு பின்னால்?

          பெரும்பாலானோர் மரணத்திற்கு பின்னர் சொர்க்கம்,நரகம் இருக்கிறது என்று நம்புவர். இன்னும் சிலர் கடவுளே இல்லை இதில் சொர்க்கம் எங்கே நரகம் எங்கே என்று வாய்ப்பேச்சு பேசுவர். ஆக எவருமே அறியாத எவருக்கும் புரியாத ஒரு மாய உலகமே மரணத்திற்கு பின்னால் நம்மை தொடர வைக்கிறது.  எதற்குமே அஞ்சாத மனிதன் கூட தன் மரணத்திற்கு நிச்சயம் அஞ்சுவான். மரணத்திற்கு பின்னர் நாம் என்ன செய்ய போகிறோம் என்ற இனம் புரியாத வேளையில் நாம் ஏன்  மரணத்திற்கு அஞ்ச வேண்டும்? இந்த பூமியில் நாம் தானம்,தர்மங்களை செய்து ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் மட்டுமே...