Find us on Google+ June 2012 ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

மரணத்திற்கு பின்னால்?

பெரும்பாலானோர் மரணத்திற்கு பின்னர் சொர்க்கம்,நரகம் இருக்கிறது என்று நம்புவர்.

Sunday, 17 June 2012

உலகப் பணக்காரர்களில் ஒருவர் நித்தியானந்தா !!!

2009 ஆம் ஆண்டில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்ற   முகேஷ் அம்பானியின் அந்த ஆண்டு வருமானம் 14 கோடி மட்டுமே. ஆனால் அதே ஆண்டில் உலகம் அறியாத பணக்காரர் பட்டியலில் ஒளிந்து கொண்டிருந்தவர் மதுரை இளைய ஆதீனம் நித்தியானந்தா தான். 2009-ஆம் ஆண்டில் மட்டும் இவருடைய ஓராண்டு வருமானம் 90 கோடி. அதுவும் கிடைத்த ஆவணங்களின் மூலம் அலசி பார்த்ததிலே 90 கோடி என்றால் அதையும் மீறி எவ்வளவு சொத்து சேர்த்திருப்பாரோ தெரியவில்லை. இவருடைய மொத்த சொத்து மதிப்பு 2ஜி வழக்கில் கொள்ளை அடித்த பணத்தை விட அதிகமாகும் போல. இந்த பணத்தையெல்லாம் அவர் எப்படி சம்பாதித்தார்...

நடுத்தர குடிமகன்‌களைக் காக்க “குடிமகன்களுக்கு” விலை உயர்வு !

எரியும் அடுப்பில் இருந்து ஒடும் வாகனம் வரையிலும் எரிபொருளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றன.  இந்த நிலையை எப்படி நடுத்தரவர்க்க குடிமகனால் சமாளிக்க முடியும். அரசின் கல்லாப்பெட்டியை நிறைப்பதற்கு நடுத்தரவர்க்க குடிமகன்‌கள் தான் கிடைத்தோமா?  இதற்கு மாற்று வழி யோசிக்கலாமே ! தினமும் எந்த கடை வெறிச்சோடி கிடக்கிறதோ இல்லையோ ஆனால் இந்த டாஸ் மார்க் கடைகள் மட்டும் வெயிலானாலும், குளிரானாலும் விடுமுறையே இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டில் மட்டும் 6804 மதுபானக்கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் கிடைக்கும் ஒரு...

லண்டன் ஒலிம்பிக்கில் வெறும் 76 இந்தியர்கள் தானா?

120 கோடி இந்திய மக்கள் தொகையில் வெறும் 76 பேர் தான் ஒலிம்பிக்கிற்கு தகுதி படைத்துள்ளனர் என்பது நமது இந்திய விளையாட்டு வீரர்களின் திறமையை தவிடு பொடியாக்கியதைப் போன்று உள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு சீனாவில் நடந்த ஒலிம்பிக்கோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் சற்று கூடுதல் தான் .  சீன ஒலிம்பிக்கில் 56 பேர் தேர்வாகியிருந்தனர். இந்த ஆண்டு நடக்கவிருக்கும் ஒலிம்பிக்கிற்கு ஆண்கள் 56 பேரும் பெண்கள் 20 பேரும் தேர்வாகியுள்ளனர். இருப்பினும் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பல பதக்கங்களை வென்று குவித்தவர்களால் கூட ஏன் ஒலிம்பிக்கில் தேர்வாக முடியவில்லை...

ப்ரீபெய்ட் ஆட்டோ சேவை

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் புதிதாக அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது ப்ரீபெய்ட் ஆட்டோ சேவை. 1997 ஆம் ஆண்டு அமல் படுத்த பட்ட இந்த திட்டத்தில் ஏற்பட்ட பல குளறுபடியால் இந்த திட்டம் பாதியிலையே கைவிடப் பட்டது. மீண்டும் பல புதிய திருத்ததுடன் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தினமும் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்க்கு வந்து போகின்றனர்.  120 அதிவேக இரயில்களும், 273 எலெக்ட்ரிக் இரயில்களும் வந்து போகின்றன.  பல்வேறு மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வருவோர்களை அங்கிருக்கும் ஆட்டோக்காரர்கள் அதிக பணத்தை...

Saturday, 16 June 2012

ஒரு விஞ்ஞானியை உருவாக்கிய அம்மா சென்டிமெண்ட்

காற்றிலிருந்து மின்சாரம் தயாரித்து செல்போனை சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த பீட்டர் ஜான் என்பவர் . பரமக்குடி அரசு  ஐ.டி.ஐ-யில் படிப்பை முடித்து விட்டு தற்போது எலெக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார்.   இவருக்கு புது கண்டிபிடிப்புகளை தயார் செய்வதில் தனி ஆர்வம்.    இந்த ஆர்வம் அவருக்கு இளம் வயதிலையே இருந்ததா என்று கேட்டதற்கு இல்லை என்று  பதிலளித்த அவர்  , அவருக்குள் ஆர்வம் வந்தது ...

Wednesday, 13 June 2012

விளைநிலங்கள் எல்லாம் தமிழகத்தில் "விலை நிலங்களாகின்றன".

தண்ணீருக்காக கர்நாடகாவிடம் கையேந்தி நின்ற நம் தமிழர்கள் தற்போது காய்கறிகளுக்காவும் கர்நாடகா மற்றும் ஆந்திராவிடம் கையேந்தி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதற்கெல்லாம் என்ன காரணம் ? தற்போது தமிழகத்தில்  விளைநிலங்கள் எல்லாம் ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றப்பட்டு வரும் நிலையில்  விளைவிக்க இடம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.  தினந்தோறும் கர்நாடகாவில் இருந்து 5000 டன் காய்கறிகள் சென்னை கோயம்பேடு சந்தைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் ஆந்திராவில் இருந்தும் 800 டன் காய்கறிகள் தினந்தோறும் இறக்குமதி செய்யப்படுகின்றன....

Monday, 11 June 2012

நம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா...?

இந்த கட்டுரையை Facebook இல் படித்தது. . உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள். . .......PLEASE SHARE THIS...... சமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறைக்கூறுவது நாம் செய்யும் தவறு... விலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம்... கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா....?? கீழே படியுங்கள்...... ஒரு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 39. இன்று 1 US $ = ரூ 53. அமெரிக்க பொருளாதாரம் உயர்கின்றதா....??? அதுதான் இல்லை.. இந்தியாவின் பொருளாதாரம் வீழ்கிறது....!!! நாம் குடிக்கும் ஒவ்வொரு குளிர்பானத்தின் தயாரிப்பு...