Find us on Google+ நூறு நாள் வேலை திட்டம் பலன் தருமா ? ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Wednesday 18 July 2012

நூறு நாள் வேலை திட்டம் பலன் தருமா ?

கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்காக 2005-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு  திட்டம் தமிழகத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு  திட்டமாக 2008-ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்தது. 

 

கிராமப்புற பாமர மக்கள் எல்லாம் நகர்புறங்களை  நோக்கி படையெடுக்க ஆரம்பித்ததனால் தான் இந்த திட்டமே கொண்டுவரப்பட்டது.

 

இப்புதிய முறையை, ஆந்திர மாநிலத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு பகுதியில், இம்முறை கையாளப்படுகிறது. கர்நாடகா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்கள் இப்போது தான் இம்முறையை துவங்கியுள்ளனர். தற்போது, தமிழகத்திலும் இந்த தணிக்கை முறையை மாநில அரசு அமல்படுத்தவுள்ளது.  தமிழகத்தில் இத்திட்டத்திக்கு மிகப் பெரிய வரவேற்பு நிலவுகிறது.

இத்திட்டத்தின் அடிப்படையில் நூறு நாட்கள் வேலை செய்ய வேண்டும். இதில் ஆண், பெண் என இருபாலரும் அடங்குவர். அவர்களது கிராமத்தின் சுற்றுசூழலை செம்மைப் படுத்துவதே இந்த நூறு நாள் வேலை திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

 

இதன்  அடிப்படையில் காட்டு வளங்களைப் பாதுகாத்தல், குளம், குட்டை, ஏரிகளை  செப்பனிடுதல் , சாலை பணிகளை சீர்திருத்துதல் மற்றும் சாலை இணைப்பு வசதியினை மேம்படுத்துதல் , மரம் நடுதல் , பழுதுபட்டுள்ள கால்வாய்களை சீர் செய்தல் , களைகளை களைதல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.

18 வயது முதல் 60 வயதினர் வரை இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றலாம். தனி நபருக்கென மட்டுமல்லாமல் , மொத்த குடும்ப உறுப்பினர் அனைவரும்

இத்திட்டத்தின் கீழ் பணியாற்றலாம். அவர்களுக்கென தனித்தனியாக "வேலை அட்டை" வழங்கப்படுகிறது. தினசரி இவர்களது பணி நேரம் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை.

 

ஒவ்வொரு கிராமத்திற்கும் கீழ் மக்கள் நலப் பணியாளர்களை நியமித்து அவர்களது கட்டுப்பாட்டின் கீழ்  தேசிய ஊரக வேலைவாய்ப்பு  திட்டம் செயல்பட்டு வந்தது.  வாரம் ஒருமுறை பணியாளர்கள் வேலை செய்த நாட்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப் பட்டு வந்தது.

 

ஆனால், இத்திட்டத்தில், பணிகள் நடக்காமலே பணிகள் நடந்ததாகவும், தொழிலாளர்களின் பெயர்களை போலியாக தயார் செய்து, திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகையை உள்ளாட்சி பிரதிநிதிகளும், பணியாளர்களும் சுருட்டிக் கொள்ளும் செயல்கள், பல பகுதிகளில் நடந்து கொண்டிருக்கின்றன.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவைச் சுற்றிலும் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அனைவரும் இந்த நூறு நாள் வேலை திட்டத்தையே நம்பி வாழ்கின்றனர். ஆனால் , போலியாக தொழிலாளர்கள் பட்டியலைத் தயார் செய்து, திட்டத் தொகையை சுருட்டிக் கொண்டு பணியே நடக்காமல், நடந்தது போல், "பில்' தயார் செய்து, பணத்தை கையாடல் செய்வது போன்ற செயல்களால் , தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பளப் பணம் பாதிக்கு பாதியாக தான் கிடைத்தது.

 

மேலும், இந்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது எவரேனும் உயிரிழக்க நேரிட்டால்

அரசாங்கத்தில் இருந்தே இறந்தவரின் குடும்பத்திற்கு ஒரு இலட்சம் கொடுக்கப்பட்ட வேண்டும், மேலும் ஏதேனும் பெரிய காயங்கள் ஏற்பட்டால் 15 ஆயிரம் ரூபாய் வழங்கப் படவேண்டும் என்பதே இந்த திட்டத்தின் அம்சம்.

 

பரமக்குடி தாலுகாவில் உள்ள பொதுவக்குடி கிராமத்தில் நூறு நாள் வேளையில் ஈடுபட்டுள்ள பொன்னம்மாள்  கூறுகையில், போன வருஷம் என் கணவர் மரம் வெட்டும் போது தவறி வாய்க்கால்ல விழுந்து இறந்துட்டாறு  , எவ்வளவோ போராடியும் அரசாங்க்கத்துல இருந்து கிடைக்க வேண்டிய பணம் கிடைக்கவே இல்லை , கடைசியா கலெக்டர் கிட்ட மனு கொடுத்த அப்பறம் தான் நடவடிக்கை எடுத்து எனக்கு பணம் கொடுத்தாங்க்கா அதுவும் 80 ஆயிரம் ரூபாய் தான் கைக்கு வந்தது, மீதம் 20 ஆயிரம் கேட்டதுக்கு வந்தத வாங்ககிக்கிட்டு போமானு மக்கள் நலப் பணியாளர் சொன்னார் என்று  ஆதங்கமாய் பேசுகிறார்.

 அதே பரமக்குடி தொகுதியில் பக்கத்து ஊரான "அண்டக்குடி" கிராமத்தைச்  சேர்ந்த வள்ளியம்மை கூறுகையில் தினமும் 8 மணிக்கு வேலைக்கு போயிட்டு பொழுது சாயுர நேரம் 4 மணிக்கு தான் வீட்டுக்கு திரும்புறோம், ஆனால் நாங்க சரியான நேரத்துக்கு வராது இல்ல, ஒளுங்க வேலையா செய்றது  இல்லனு சம்பளத்தை குறைச்சு தான் கொடுக்குராங்க , நாங்கலும் வேர வழியே இல்லாம கொடுக்குரத வாங்கிக் கிட்டு  இருக்கோம்.

 

  இந்த முறையான தவறுகளைக் கலைவதற்காகவே

மத்திய அரசின் அறிவுறுத்தலின்பேரில், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டக் கணக்குகளையும், கிராம ஊராட்சி கணக்குகளையும் தொழிலாளர்களே தணிக்கை செய்யும் புதிய நடவடிக்கையை, மாநில அரசு எடுத்துள்ளது. இதற்காக, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சி கொடுக்க முடிவும் செய்யப் பட்டுள்ளது


 இந்நிலையில், ஒவ்வொரு கிராமத்திலும் நடக்கும் ஊரக வேலை வாய்ப்புத் திட்டப் பணிகளை கண்காணித்து கொள்ளவும், அதற்காக ஊராட்சிகளில் பராமரிக்கப்படும் கணக்குகளை சரிபார்த்துக் கொள்ளவும், அத்திட்டத்தில் வேலை செய்யும் , தொழிலாளர்களையே ஈடுபடுத்த முடிவு செய்துள்ளனர்..

 

இதன் மூலம், அவர்களின் கணக்குகளை அவர்களே சரிபார்த்துக் கொள்ள முடியும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களை இப்பணிக்காக தேர்வு செய்ய உள்ளனர், ஒரு கிராமத்தின் கணக்குகளை, மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர் சரி பார்ப்பர். ஒரு கிராமத்தின் கணக்குகளை சரிபார்க்கும் நபர், இரு முறைகளுக்கு மேல், அந்த கிராமத்தின் கணக்குகளை சரிபார்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று புது சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

 உள்ளாட்சித் துறை தணிக்கை அதிகாரிகள், உள்ளாட்சி கணக்குகளை தணிக்கை செய்து வருவதன் மூலம் ஆண்டுக்கு 21 கோடி ரூபாய் அரசுக்கு செலவாகிறது. இதையடுத்து, செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக, தொழிலாளர்களையே தணிக்கை பணியில் ஈடுபடுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தணிக்கை செய்யும் தொழிலாளர்களுடன், உள்ளாட்சி தணிக்கைத் துறையின் இணை இயக்குனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியும் உடனிருப்பார். தணிக்கை மேற்கொள்ளும் கிராமத்தில், தொழிலாளர்கள் ஐந்து நாட்கள் இருக்க வேண்டும். முதல் மூன்று நாட்கள், கிராம கணக்குகள் அனைத்தையும் அவர்கள் பார்வையிடவேண்டும். அடுத்த இரண்டு நாட்கள், தணிக்கைப் பணியை மேற்கொள்ள வேண்டும் என சட்டம் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

 

இந்த திட்டத்தினை அறிந்த பரமக்குடி வாழ் கிராம மக்களிடையே மிகுந்த வரவேற்பும் கரவொலியும் கிளம்பியது.

 

 

பொதுவக்குடி கிராமத்தைக் சேர்ந்த முருகன் கூறுகையில் ,
எங்களது கணக்குகளை நாங்களே சரிபார்க்கும் முறை வரவேற்கத்தக்கது. இத்திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பெரும்பாலோர், கல்வியறிவு இல்லாத பெண்கள். அவர்களுக்கு இப்புதிய முறை பயனுள்ளதாக இருக்கும். ,. மேலும் கிராமத்தின் அனைத்துப் பகுதிகளும் தொழிலாளர்களுக்க, நன்கு தெரியும் என்பதால் எந்த வித ஊழலும் இல்லாமல் , இனி இந்த திட்டம் செம்மையாக நடைபெறும் எனிக்கிறார் ஆனந்ததுடன்.


0 comments:

Post a Comment