Find us on Google+ பாம்பனில் 40 ஆண்டாக இருளில் கிடக்கும் கிராமம் ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Thursday 26 July 2012

பாம்பனில் 40 ஆண்டாக இருளில் கிடக்கும் கிராமம்

கண் இருந்தும் குருடர்கள் போல வாழ்ந்து வருகிறார்கள் பாம்பன் கிராம மீனவ   மக்கள்இரண்டு மணி நேர மீன் வெட்டையே சகித்துக் கொள்ள முடியாதவர்களாய் நாம் இருந்துகொண்டிருக்கிறோம் ஆனால் இந்த கிராம மக்களோ 24  மணி நேரமும் மின்சாரத்தை கண்ணால் காணாதவர்களாக இருக்கின்றனர்.  


இருளிலே பிறந்து , இருளிலே மடிவதென்பது இந்த ஊர் மக்களின் சாபக் கேடா என்ன ? அறிவியல் எவ்வளவோ வளர்ந்து வருகிறது. ஆனால் இப்படியும் இருளில் முழ்கி கிடக்கும் ஓர் கிராமம் இன்றளவும் இருந்து கொண்டே தான் இருக்கின்றது.

ராமேசுவரம் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான சுமார் 30 ஏக்கர் நிலம், பாம்பன் ஊராட்சிக்கு உட்பட்ட முந்தல்முனை என்ற இடத்தில் உள்ளது. இங்கு, 108 குடும்பங்கள், சுமார் 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.

கோவிலுக்குச் சொந்தமான மேற்கண்ட இடத்துக்கு அரசு பட்டா, ஊராட்சி மன்ற ரசீது வழங்குவதில் சிக்கல் உள்ளதாகக் கூறப்படுவதால், வீடுகளுக்கு மின்சாரம் பெற விண்ணப்பிக்க முடியாமல், கடந்த 40 ஆண்டுகளாக இருளில் மூழ்கிக் கிடக்கிறது இந்த கிராமம்.

முந்தல்முனை கிராமத்துக்கு வீட்டு வரி ரசீது வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட ஆட்சியர், இந்து அறநிலையத் துறையிடம் மீனவர்கள் பல ஆண்டுகளாக முறையிட்டு வந்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. ஆனால், கோவில் இடத்தை தானமாகக் கொடுக்கவோ, விற்கவோ சட்டப்படி முடியாது என இந்து அறநிலையத் துறை தெரிவித்துவிட்டது. இதனால், மீனவர்களுக்கு பட்டா மற்றும் வீட்டு வரி ரசீது கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனையடுத்து, மின்சாரம் கிடைக்காமல் மீனவக் குடும்பக் குழந்தைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது.   படிக்க முடியாமலும், மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் போன்ற மின்சாரம் சார்ந்த பொருள்களைப் பயன்படுத்த முடியாமல், மலைவாழ் மக்கள் போல் வாழ்ந்து வருகின்றனர்

ஜெ ஆட்சியில் மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் கொடுத்து என்ன பயன் ? அதை பயன்படுத்த இந்த ஊர் மக்களுக்கு  மின்சாரம் கொடுக்க வில்லையே ?


முந்தல்முனை கிராமத்தை சேர்ந்த  பொன்னுச்சாமி கூறியதாவது: கடந்த 40 ஆண்டுகளாக முந்தல்முனையில் வசிக்கும் எங்களுக்கு மின்சாரம், குடிநீர், சாலை வசதி இல்லாமல், கேட்பாரற்று தெருவில் வசிப்பது போல் வாழ்ந்து வருகிறோம். தற்போது, ஒப்பந்த அடிப்படையில் நிலத்தை வாடகைக்கு வழங்கிட, இந்து அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கையை துரிதப்படுத்தி, எங்கள் கிராமத்துக்கு மின்சாரம் கிடைக்க, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்தார்.

அடுத்து அதே கிராமத்தை  சேர்ந்த சோமசுந்தரம் கூறுகையில் , நாங்க தான் படிக்கமா போயிடம்னாலும்  எங்க பிள்ளைகளும் படிக்க முடியல , எங்க இனமே இருட்டுல வாழ்க்கையை ஓட்டனுங்கிறது தான் எங்க தலை எழுத்த ? இந்த நிலையை மாத்த புதுசா யாரும் ஆட்சிக்கு வர மாட்டாங்களா என கண்ணீர் விட்டு குமுறுகிறார்.


குறிப்பு:
இந்த கட்டுரை புதிய தலைமுறைக்காக  பாம்பன் சென்று மக்களிடம் பேட்டி கண்டு எழுதப்பட்டுள்ளது .


0 comments:

Post a Comment