Find us on Google+ "வெற்றி மேல் வெற்றி விருது மேல் விருது " குவித்துக் கொண்டிருக்கிறார் இல்லேஸ்வரி ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Monday 6 August 2012

"வெற்றி மேல் வெற்றி விருது மேல் விருது " குவித்துக் கொண்டிருக்கிறார் இல்லேஸ்வரி

  "வெற்றி மேல் வெற்றி    விருது மேல் விருது " குவித்துக் கொண்டிருக்கிறார்     இல்லேஸ்வரி

திருநெல்வேலி மாவட்டம் நம்பிதலைவன் பட்டயம் கிராமத்தில் வறுமையின் ஓட்டத்தில் பிறந்த இல்லேஸ்வரிதனது தொடர் ஓட்டத்தின் மூலம் பல பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு முடிவிற்காக காத்திருக்கும் இல்லேஸ்வரி  பத்துக்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

இவரது தந்தை விவசாயி , தாய் இல்லத்தரசி இவளுக்கு ஒரு இளைய சகோதரியும்  உண்டு.

மூன்றாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே இல்லேஸ்வரிக்கு விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வமாம். அவரது ஆர்வத்திற்கு முக்கிய காரணமே   அவரது அப்பா முத்து என்கிறார் இல்லேஸ்வரி. நம்பிதலைவன் பட்டயம் கிராமத்தில் இருந்து  5 கிலோமீட்டர் தூரத்தில்  இருக்கும் வள்ளியூர் விளையாட்டு மைதானத்திற்கு அப்பாவும் மகளும் தினமும் காலை, மாலை இருவேளையும் விளையாட சென்று விடுவார்களாம்அவரது அப்பாவுக்கும் விளையாட்டில் அதிக ஆர்வமாம். பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்திருக்கும் அவர் மாநில அளவில்  குண்டு எறிதல் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறாராம். அதனை தொடர்ந்து அவரது குடும்ப வறுமை காரணமாக அவரால் விளையாட்டை தொடர முடியாமல் போனதாம். தான் அடையமுடியாமல் போன இலட்சியத்தை தனது மகளாவது அடைய வேண்டும்காமென்வெல்த் , ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவள்  நிச்சயம் தங்கப் பதக்கம் பெறுவாள் என்று கூறும் அவரது பேச்சில்  நம்பிக்கை  மிளிர்கிறது

மாநில மற்றும் தேசிய அளவில் தங்கம் ,வெள்ளி , வெண்கலம் என குவித்துக் கொண்டிருக்கும் இல்லேஸ்வரிக்கு , ஒலிம்பிக்கில் தமிழகத்தின் தங்க தாரையாக விளங்க வேண்டுமென்பதே  கனவாகும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் 2010 முதல் 2012 -க்குள் பல பதக்கங்களையும் விருதுகளையும் குவித்துள்ளார்.

இவர் எட்டாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே தனது சாதனைகளை துவங்கி விட்டார்.


எட்டாம் வகுப்பு படிக்கும் போது  ஜூனியர் பிரிவில்"மனித உரிமைகள் கழகத்தின்" சார்பாக தங்கப் பதக்கம் வென்றார்.
அதனைத் தொடந்து  ஒன்பதாம் வகுப்பில் "சீனியர் பெஸ்ட் அத்தெலடிக்"  அவார்டையும்,
2010 -இல் நேசனல் அளவில் 2 தங்கத்தையும் , ஒரு சில்வரையும் வென்றார்.

தேசிய அளவில் 100  மீட்டர் ஓட்டத்தில் தங்கத்தையும், தொடர் ஓட்டத்தில் வெள்ளியையும் வென்றார்.

அதுமட்டுமல்லாமல், தென்மண்டல போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டத்தில் 3 வெள்ளிகளையும் , நீளம் தாண்டுதலில் 3 வெண்கலத்தையும் கைப்பற்றினார்.     


இரண்டு வருடத்திற்குள், மாநில அளவில் நூறு மீட்டரில் 6 தங்கத்தையும்,   இருநூறு மீட்டரில்தங்கத்தையும் , நீளம் தாண்டுதலில் ஒரு தங்கமும் என மொத்தம் 8 தங்கத்தையும், 12  வெள்ளியையும் , 7 வெண்கலத்தையும் பெற்றுள்ளார்.

இவரது சாதனையைப் பாராட்டிய அன்றைய நெல்லை மாவட்ட கலெக்டர் " சிறந்த வீராங்கனை " என்ற பட்டத்தை 2011 -ல்  இல்லேஸ்வரிக்கு வழங்கினார்.

பதினாறு வயதினருக்குள்ளான சீனியர் பிரிவில் சிறந்த வீராங்கனைகளுக்கு   வழங்கப்படும் 10 ,000 ரூபாய் ரொக்கத் தொகையும் இந்த இல்லேஸ்வரிக்கு தான் கிடைத்திருக்கிறது.

தற்போது  திருநெல்வேலியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்த இல்லேஸ்வரியின் விளையாட்டு ஆர்வத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு  ,  அந்த பள்ளி நிர்வாகமே தினமும் 4 மணிநேரம் திருநெல்வேலி ஸ்டேடியத்தில் விளையாட  அனுமதி வழங்கியது

இல்லேஸ்வரியிடம்  உங்களது பொழுது போக்கு என்னவென்று கேட்டதற்குஅவரது தந்தை விடுமுறை தினங்களில்  100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக சாம்பியன்சிப் பட்டம் பெற்ற  "ஹேட்லி"-யின் சிடிக்களை போட்டு  காமிப்பாராம். கேரளாவைச் சேர்ந்த   பி.டி.உஷா மற்றும் அஞ்சு சார்சுகளின் சிடிக்களையும் அடிக்கடி போட்டு  காமிப்பாராம் , இந்த சிடிக்கள் தான் என்னை மேலும்
ஊக்கப்படுத்துவதற்கு காரணமாய் இருந்தது என்கிறார்.


தனது தந்தையின் ஊக்கத்தாலும்  தனது விடாப்பிடியான முயற்சியாலும் நிச்சயம் ஒலிம்பிக்கில் முத்திரை பதிப்பேன் என்கிறார் விவேகத்துடன் இல்லேஸ்வரி.


இறுதியாக  இல்லேஸ்வரி சில கோரிக்கைகளையும் அரசுக்கு முன் வைக்கிறார்.
விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்து கொண்டிருக்கும் என்னைப் போன்ற பலருக்கு விளையாட வசதியான மைதானங்கள் இல்லாமல் இருப்பது ஒரு பெரிய குறைபாடாக இருக்கிறது. இந்த குறைபாட்டை  சீர் செய்தால் தமிழகத்திலிருந்தும்   பல ஒலிம்பிக் நடசத்திரங்கள் மிளிர்வார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

0 comments:

Post a Comment