Find us on Google+ மிளிரத் துடிக்கும் ஒலிம்பிக் நட்சத்திரம் ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Sunday 26 August 2012

மிளிரத் துடிக்கும் ஒலிம்பிக் நட்சத்திரம்


sஓடி விளையாடு பாப்பா , நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா என்ற பழமொழிக்கேற்ப விளையாட்டையே தனது உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் சரவணக்குமார்.



2014-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தில் நமது இந்தியன் அணியில் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார் இவர் .
அவரது ஒலிம்பிக் கனவை அவரே நமது புதிய தலைமுறையுடன் பகிர்ந்து கொள்கிறார்.
நான் சிவகங்கையில் உள்ள ராஜா அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன்.  என் அப்பா லாரி ஓட்டுனராக பணிபுரிகிறார்.எனது அம்மா இலத்தரசி, எனக்கு ஒரு இளைய சகோதரனும், மூத்த சகோதரனும் இருக்கின்றனர்.
நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போதிருந்தே ஜூனியர் பிரிவில் மாவட்ட அளவில் நடந்த கால்பந்தாட்டத்தில் வெற்றி வாகை சூட்டினேன். அன்றிலிருந்து  இன்று வரை 6 முறை மாநில அளவிலான கால்பந்தாட்டத்தில் வெற்றி பெற்றுள்ளேன்.
எனக்கு சிறுவயதிலிருந்தே விளையாட்டின் மீது இருந்த ஆர்வமும் எனது பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் கொடுத்த ஊக்கமுமே நான் உலக்கோப்பைக்கு தேர்வானதற்கான மூலக்காரணம் என்கிறார் .

நீங்கள் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறீர்கள் விளையாட்டால் உங்கள் படிப்பிற்கு தடையேதும் ஏற்பட்டதுண்டா ? என்று கேட்டதற்கு
சட்டென்று அப்படியெல்லாம் ஒருபோதும் நிகழ்ந்ததேயில்லை.  எனது பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள்  மற்றும் சகோதரர்கள் என அனைவரும் என் ஆர்வத்தின் போக்கிலேயே என்னை விளையாட அனுமதித்ததோடு எனக்கு அதிக உற்சாகமூட்டிவருகின்றனர்.

அதே  நேரத்தில் தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்னரே விளையாட்டை ஒதுக்கிவைத்துவிட்டு படிப்பில் முழு கவனம் செலுத்திவருகிறேன் என்கிறார்.
பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்ததும் விளையாட்டுத் தொடர்பான படிப்பையே தேர்வு செய்து படிக்கப் போவதாகவும் விளையாட்டையே தனது உயிர் மூச்சாகவும் இறுதி மூச்சாகவும் நினைப்பதாகவும்  கூறுகிறார்.
இவர் அந்தமான் நிக்கோபார் , கோவா, மற்றும் ஜம்மு காஷ்மீர் வரையிலும் சென்று தமிழகத்தின் புகழை இந்தியத் தலைநகர் வரை தலைநிமிரச் செய்துள்ளார்.
இறுதியாக கோவாவில் விளையாடிய கால்பந்தாட்டத்தில் இவர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இவரது ஆட்டத்தின் தனித்திறனே எதிர் அணிக்கு செல்லும் பந்தை தடுத்து நிறுத்தி தனது அணியின் பாயிண்டை உயர்த்துவது தான்.
இங்கிலாந்து கால்பந்து வீரரான ஜான்டெரி தான் என்னுடைய ரோல் மாடல். அவரது ஆட்டத்தை அடிக்கடி சீடி போட்டு பார்ப்பேன் , அவரிடம் இருந்து  கற்றுக்கொண்ட கால்பந்தாட்டத்தின் நுணுக்கங்கலாளே எனக்கு  2014-ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் விளையாட வாய்ப்பு  கிடைத்துள்ளது என்று பெருமித்துடன் சொல்கிறார்.
காமென்வெல்த், ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் ஒலிம்பிக்கில் தங்கப்  பதக்கம் வாங்கி தமிழகத்தின் பெருமையை நிலைநாட்ட வேண்டும் என்பதே எனது கனவு என்று உறுதியாக கூறுகிறார் நாளைய தமிழகத்தின் புகழை தலைநிமிரச் செய்யப்போகும் ஒலிம்பிக் நட்சத்திரம்.


1 comments:

Post a Comment