Find us on Google+ இலட்சத்தில் ஒருவன் அதுவும் தமிழன் ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Monday 6 August 2012

இலட்சத்தில் ஒருவன் அதுவும் தமிழன்

குழந்தை பருவத்திலிருந்தே அறிவியல் மீதிருந்த ஆர்வத்தின் காரணமாக இன்று நாசா வரை செல்லத் தேர்வாகியுள்ளார் பத்தாம் வகுப்பு மாணவர் ஸ்ரீராம். இவ்வளவு சிறிய வயதில் நாசா செல்ல இருக்கும் முதல்  தமிழன் ஸ்ரீராம் தான்.  அவருடைய சாதனைகளை அவரே புதிய தலைமுறையுடன் பகிர்ந்து கொள்கிறார்.


நான் மதுரை டி.வி.எஸ் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறேன். என் அப்பா குழந்தைகள் நல மருத்துவராக பணி புரிகிறார். அம்மா இல்லத்தரசி . எனக்கு இரண்டு மூத்த சகோதரிகளும்  உள்ளனர்.

என் சின்னஞ்சிறு வயதிலிருந்தே என் அப்பா மற்றும் எனது பெரியப்பா எலெக்ரானிக் கருவிகள் பொருத்தப் பட்ட விளையாட்டுப் பொருட்களையே
எனக்கு வாங்கித் தருவர்.

அந்த விளையாட்டுப் பொருட்களில் எலெக்ட்ரானிக் கார்களை தனித்தனியாக பிரித்துப் போட்டு மீண்டும் ஒன்று சேர்த்து காரை ஓட வைப்பேன். எனது பெரியப்பா எலெக்ட்ரானிக் துறையில் பொறியியல் முடித்து விட்டு , மதுரையில் தனியார் இண்டக்சன் ஸ்டவ் நிறுவனத்திற்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.  அவர் எனக்கு அளித்த ஊக்கத்தின் காரணமாகவே எனக்கு அறிவியலின் மேல் இருந்த ஆர்வம் அதிகரித்தது.

நான் படிக்கும் மதுரை டி.வி.எஸ் பள்ளியில் ஆண்டு தோறும் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் எனது படைப்பையே முதன்மையானதாக எப்போதும் விளங்கியது. மற்றும் மண்டல, மாநில , தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றேன்.
அறிவியலின் ஒரு பிரிவான ரோபாடிக்ஸ் பற்றி அறிந்து கொள்ள அதிக ஆர்வாயிருந்தேன். எனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து ரோபாடிக்ஸ் பற்றிய தகவல்களை  இணையத்தின் மூலம் கற்றுக் கொண்டேன்.

இணையத்தின் வாயிலாக கற்றுக் கொண்டிருக்கும் போது ஏற்படும் சந்தேகங்களுக்கும் எனது பெரியப்பாவே தீர்வளிப்பார். 

'மெக்சஸ் எஜிகேசன்' மற்றும் 'ஐகென் சயண்டிபிக்' சார்பில் இளம் மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் படைப்புத் திறன் போட்டியை சர்வதேச அளவில் நடத்தியுள்ளது.
சர்வதேச அளவில் நடந்த போட்டியாதலால் ஏழு இலட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் தேர்வானவர்கள் ஏழு பேர் மட்டுமே . அதிலும் இரண்டு பேர் இந்தியர்கள்.

லக்னோவைச் சேர்ந்த மாணவர் முகமது சித்திக் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த நான் (ஸ்ரீராம்)  , மீதம் 4 மாணவர்கள் பிற நாடுகளைச்‌ சேர்ந்தவர்களாகவும், ஒருவர் மட்டும் "ஐ‌எஸ்‌ஆர்‌ஓ" –வில் பணியாற்றுபவர். எங்களுக்கு  பயிற்சி அளிப்பதற்காக தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

மெக்ஸஸ் நிறுவனம் நடத்திய எழுத்துத் தேர்வில் பதினாறு மாணவர்கள் இந்தியாவில் இருந்து தேர்வாகி அடுத்த சுற்றுக்காக மும்பை செ‌ன்றிருந்தோம்.
முதல் சுற்று திறனாய்வுத் திறனை சோதிக்கும் அடிப்படையில் அமைந்திருந்தது. அடுத்தடுத்த சுற்றுகள் அறிவியல் சாதனங்களின் அடிப்படையில் இருந்தது. இறுதியாக மேடைப் பேச்சு போட்டி முடிவடைந்தததும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப் பட்டன.

தேர்வான ஏழு பேரையும் அமெரிக்க அதிபர் ஒபாமா நாசாவிற்கு அழைத்து 8 நாட்கள் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்திருப்பது மிகவும் மகிழ்ச்கியாக இருக்கிறது.
நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்ததும் கோவையில் உள்ள கல்லூரியில் ரோபாடிக்ஸ் சார்ந்த படிப்பினை தேர்வு செய்ய எண்ணியுள்ளதாக கூறியுள்ள ஸ்ரீராம்.
மெக்ஸஸ் நிறுவனமே எங்களுக்கு பயிற்சி அளித்து எங்களை அறிவியலாளராக்கினால் விரைவில் எங்களைப் போன்ற இளைய கண்டுபிடிப்பாளர்களின் கண்டுபிடிப்பு இந்த உலகிற்கு கிட்டும் என்கிறார் பெருமிதத்துடன்.

இன்னும் எத்தனையோ படைப்புகளை தனக்குள்ளே ஒளித்து வைத்திருக்கும் இளையதலைமுறையினரை வெளிச்சத்திற்கு கொண்டுவர இது போன்ற   பல போட்டிகளில் அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ள வாய்ப்பளியுங்கள் என்று கூறி நிறைவு செய்தார்.



0 comments:

Post a Comment