Find us on Google+ ஆங்கில கேள்வி தமிழுக்கு தோல்வி. ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Sunday, 26 August 2012

ஆங்கில கேள்வி தமிழுக்கு தோல்வி.

யு‌பி‌எஸ்‌சி தேர்வு முடிவில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் வருடத்திற்கு வருடம் குறைந்து கொண்டு வருவதற்கு காரணம் என்ன?

 "வெள்ளத்தால் அழியாது

 வெந்தளாலாலும் வேகாது

 கள்ளர்க்கோ பயமில்லை

 காவலுக்கோ துணையில்லை"

 

எதனாலும் அழிக்க முடியாத செல்வம் கல்வி செல்வம் மட்டுமே. அப்படிப்பட்ட கல்வியில் இன்றைய நிலையில் மிகப் பெரிய ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது.

 

தமிழ்வழிக் கல்வி ஒன்றும் , ஆங்கில வழிக்கல்வி என்று மற்றொன்றுமாய் . இரண்டு மொழிகளிலும் உள்ள பாடங்கள் ஒன்று தான். மொழி மட்டுமே வேறுபட்டவை என்றாலும் இன்றைய நிலையில் அரசு தேர்வுகளுக்காக(டி‌என்‌பி‌எஸ்‌சி,யு‌பி‌எஸ்‌சி) படிக்கும் மாணவர்களுக்கிடையே பெரும் மன உழைச்சல் ஏற்பட்டுள்ளது.

 

தொடக்கப்பள்ளியிலிருந்தே தமிழ் வழியிலையே பயின்று வந்த மாணவர்கள், போட்டித் தேர்வுக்கு தயாராகும் போது மன உழைச்சலினாலே பாதி பேருக்கு மேல் வேறு வேலைகளை தேடி செல்கின்றனர்.

 

அப்படி என்ன மன உழைச்சல் இருக்கப் போகிறது என்கிறீர்களா?

 

ஆரம்பக் கல்வியையே ஆங்கிலவழிக் கல்வியில் பயின்றவர்களுக்கு போட்டித் தேர்வுகள் அவ்வளவு மலைப்பானது அல்ல. அதே சமயம் தமிழ் வழியில் கற்று வந்தவர்கள் சற்று மலைத்துப் போய் நின்று விடுகின்றனர்.

 

தமிழ் வழியில் கற்று வந்தவர்கள் தேர்வுக்கு தயாராகும் போது தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு புத்தகங்களையும்  வைத்து அர்த்தம் புரிந்து படிப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ள வேண்டியிருப்பதால்,

 

தமிழ், ஆங்கில விளக்கம் பார்ப்பதற்காகவே படிப்பதில் பாதி நேரம் செலவிட வேண்டியிருக்கு. 

இதற்கு என்ன தான் மாற்று என்கிறீர்களா?

தற்போது நடைமுறையில் இருக்கும் தமிழ் வழி சமச்சீர் கல்வி புத்தகத்திலையே முக்கியமான வாக்கியங்களை மட்டும் அடைப்புக் குறிக்குள்

கொடுக்கலாமே. இதனால் தமிழ் வழியில் பயின்று வரும் மாணவர்களும் இரண்டு மொழிகளிலும் அர்த்தம் அறிந்து படிப்பதற்கு வசதியாக இருக்கும்.

 

போட்டித் தேர்வுக்கு படிப்போருக்கும் மிக எளிமையானதாக அமையும். இந்த மாற்றத்தை கூடிய விரைவில் தமிழக அரசு நடைமுறைப்படுத்தினால் வரும் ஆண்டுகளில் நடைபெறும் போட்டித் தேர்வுகளில் அதிக அளவு தேர்ச்சி சதவிகிதத்தினை எட்டிப் பிடிப்பார்கள் தமிழக மாணவர்கள்.

 

இந்த மாற்றம் தொடர்பாக புதிய தலைமுறையுடன் பகிர்ந்து கொள்கிறார் பட்டுக் கோட்டையைச் சேர்ந்த மாணவி அனுசுயா .

     நான் பள்ளிக் கல்வியை பட்டுக் கோட்டை அரசு பள்ளியிலையே  முடித்து விட்டு , தகவல் தொழில் நுட்டபத் துறையில்  இந்த ஆண்டு பொறியியல் முடித்தேன். எனக்கு சிறு வயதிலிருந்தே கலெக்டர் ஆக வேண்டும் என்பதே கனவென்பதால் தற்போது மனித நேயம் சைதை துரைசாமி "ஐ.ஏ.எஸ்" அகடாமியில் பயிற்சி பெற்று வருகிறேன்.

 

நான் பள்ளிப்படிப்பை தமிழ் மீடியத்திலையே படித்து விட்டு தற்போது "யு‌பி‌எஸ்சி" தேர்வுக்காக முழுவதுமாக ஆங்கிலத்தில் படிப்பது கடினமாகவே உள்ளது. தமிழ் மீடியம் மற்றும் இங்கிலிஸ் மீடியம் என இரண்டு புத்தகங்களையும் அருகருகே வைத்துக் கொண்டு அர்த்தம் புரிந்து படிப்பதில் நேர விரயம் அதிகமாகிறது.

 

இதனால் தமிழ் மீடியப் புத்தகத்திலையே முக்கியமானவற்றை மட்டும் ஆங்கிலத்தில் அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டிருந்தால் எங்களைப் போன்றவர்களுக்கு எளிமையானதாக இருக்கும்.

 

அடுத்ததாக ,  சென்னை அப்பாலோ "ஐ.ஏ.எஸ்" பயிற்சி மையத்தில் தற்போது

டி.என்.‌பி‌.எஸ்‌.சி குரூப் ஒன்றுக்காக படித்து வரும் அபிநயா கூறுகையில், சிவகங்கை  மாவட்டம், திருப்பாச்சத்தியிலே எனது ஆரம்பக் கல்வியை முடித்தேன் அதனைத் தொடர்ந்து மதுரை லதாமாதவன் பொறியியற் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் பட்டம் பெற்று விட்டு, கடந்த இரண்டு  மாதங்களாக அப்பலோ பயிற்சி மையத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக பயிற்சி பெற்று வருகிறேன். தமிழ் மீடியத்திலையே படித்து வந்ததால் பொருளாதாரம் , வணிகவியல் போன்ற அறிமுகமில்லாத பாடங்களை படிக்கும் போது ஆங்கிலத்தில் படிப்பது சற்று கடினமாகவே உள்ளது. பெரும்பாலான மாணவர்கள் மேற்படிப்பில்

அறிவியலை முதற்பாடமாக படித்துவிட்டு தான் இந்த பயிற்சி மையத்தை அணுகுகிறார்கள் . பயிற்சி மையத்தில் இரு தரப்பு வழிக் கல்வி (தமிழ் , ஆங்கிலம்) மாணவரக்ளுக்கும் பயிற்சி தரப்படுவதால் பெரும்பாலும் ஆங்கிலதிலேயே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இது போன்ற நேரங்களில் பொருளாதாரம் மற்றும் வணிகவியல் பாடங்களைப் பற்றிய தெளிவு இல்லாமலே தேர்வுக்கு செல்லும் படியான சூழல் அமைகிறது. இன்னொரு பக்கம் பொருளாதாரம் மற்றும் வணிகத்தை முதன்மைப் பாடமாக படித்து வந்தவர்களுக்கு அறிவியலை முழுவதுமாக ஆங்கிலத்தில் படிப்பதற்கு புதுமையாக உள்ளது.

 

மேலும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் அறிந்து படிப்பதற்கு பல புத்தகங்களை புரட்டிப் பார்க்க வேண்டியுள்ளதால் நீண்ட நேரம் விரயமாகிறது.

 

புதிய தலைமுறையின் இந்த திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப் படுத்தினால் மிகவும் சந்தோஷமாக இருக்கும் என்று ஆதங்கமாய் கூறி முடிக்கிறார் அபிநயா.

0 comments:

Post a Comment