Find us on Google+ ஒரு விஞ்ஞானியை உருவாக்கிய அம்மா சென்டிமெண்ட் ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Saturday 16 June 2012

ஒரு விஞ்ஞானியை உருவாக்கிய அம்மா சென்டிமெண்ட்


காற்றிலிருந்து மின்சாரம் தயாரித்து செல்போனை சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த பீட்டர் ஜான் என்பவர் .
பரமக்குடி அரசு  .டி.-யில் படிப்பை முடித்து விட்டு தற்போது
எலெக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார்.   இவருக்கு புது கண்டிபிடிப்புகளை தயார் செய்வதில் தனி ஆர்வம்.   



இந்த ஆர்வம் அவருக்கு இளம் வயதிலையே இருந்ததா என்று கேட்டதற்கு இல்லை என்று  பதிலளித்த அவர்  , அவருக்குள் ஆர்வம் வந்தது  எப்போது என்பதை  புதிய தலைமுறையுடன் பகிர்ந்து கொள்கிறார்.

ஓராண்டுக்கு முன்னர் என் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவ மனையில் சேர்த்தோம். என் அம்மாவை பரிசோதித்த மருத்துவர் உன் அம்மாவுக்கு இருதய நோய் இருக்கிறது எனவும் அதனால் பெரிய வேலைகள் ஏதும் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.  



மறுநாள் என் அம்மா வழக்கமாக செய்யும் வேலைகளை கவனிக்கும் போது , அவர் கஷ்டப்பட்டு நல்ல தண்ணீர் குழாயில் இருந்து தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தார்.

அதைப் பார்த்த அந்த நொடி தான் எனது முதல் கண்டுபிடிப்பிற்கான அஸ்திவாரத்தை நான் போட்டேன்.
அதனை தொடர்ந்து எலெக்ட்ரிகல் மோட்டார் மூலம் தன்னிச்சையாக தண்ணீர் வரும் கருவியை  கண்டுபிடித்தேன். 12 வோல்ட்  மின்சாரத்தில் இயங்கக் கூடிய எலெக்ட்ரிகல் மோட்டரை   ஜனவரி 1 - ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம்  செய்து காட்டினேன். தன் சாதனையைப்  பாராட்டிய அவர் மேலும் பல சாதனைகளை செய்ய வேண்டுமென ஊக்குவித்தார்.

அதற்கு அடுத்த  படியாக எனக்கு கண்டுபிடிப்பின் மீது இருந்த ஆர்வம் அதிகமானதாகையால் , அடுத்த கண்டுபிடிப்பில் களம் இறங்கிய நான் காற்றிலிருந்து மின்சாரம் உருவாக்கி அதன்மூலம் செல்போன் சார்ஜ் செய்யும் கருவியை கண்டுபிடித்துள்ளேன்.

இன்றைய நிலையில் மனிதனின் ஆறாவது விரலாக செயல்படும்  செல்போன்களை, நீண்ட நேர மின்வெட்டின் காரணமாக நாம் ஜார்ஜ் செய்ய முடியாமல் போகிறது. இதற்கு தீர்வு காண்பதற்காகவே நான் காற்றிலிருந்த மின்சாரம் உருவாக்கி அதன்மூலம் செல்போன் சார்ஜ் செய்யும் கருவியை கண்டுபிடித்துள்ளேன். 


இந்த செல்போன் சார்ஜர் கருவியை பயணத்தின்போது ஜன்னல் ஓரம் வைத்தால் போதும். ஜன்னல் வழியாக வரும் காற்று, செல்போன் சார்ஜரில் உள்ள விசிறியை சுற்றும். அந்த விசிறி மின்சாரம் உற்பத்தி செய்யும் டைனமோவை சுற்றும். டைனமோ சுற்றுவதால் ஏசி மின்சாரம் உற்பத்தியாகிறது. செல்போனை டிசி மின்சாரம் மூலமே சார்ஜ் செய்யமுடியும். இதையடுத்து கிடைக்கும் ஏசி மின்சாரத்தை டிசி மின்சாரமாக மாற்ற சிறிய டையோடை பயன்படுத்தியுள்ளேன்.

தொடக்கத்தில் 4.5 வோல்ட்  மின்சாரம் தேவைப்பட்டதால் டையோடுகளை பலமுறை தேவைக்கு ஏற்ப மாற்றி அமைத்தேன் . இறுதியாக டையோடு(4007 )- ஐ பயன்படுத்தும் போது செல்போன் சார்ஜ்  ஆனது.



இதனை  தயார்செய்ய அதிகபட்சமாக ரூ.350 வரை செலவாகிறது. சைக்கிள் டைனமோ(6 வோல்ட்), தகடால் ஆன விசிறி, டையோடு(4007), வயர், சிறிய பெட்டி ஆகிய பொருட்களை கொண்டு இதை தயாரிக்கலாம். பஸ், ஆட்டோ, கார், பைக் கோன்ற வாகனங்களில் நெடுந்தூரம் பயணம் செய்யும் பயணிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என அவர் கூறினார்.

சில செல்போன்களை  ஜார்ஜ் செய்வதற்கு   5   வோல்ட் மின்சாரம் தேவைப்படுவதால் அதற்கான முறையில் சில மாறுதல்களை எனது கண்டுபிடிப்பில் புகுத்தி வருகிறேன்.

தற்போது இதே தொழில் நுட்பத்தை பயன்படுத்தி  பேட்டரி மூலம் இயங்கும் இருசக்கர வாகனங்களுக்கு ( பைக் )  ஜார்ஜ் தீர்ந்து போனாலும் காற்றிலிருந்து மின்சாரத்தை உருவாக்கி  பேட்டரியை   ரீஜார்ஜ் செய்யும் கருவியைக் கண்டுபிடுத்து வருகிறேன்.

இந்தக் கண்டுபிடிப்பை நடைமுறைப்படுத்த  அதிக செலவு ஆவதால் அரசிடம் இருந்து ஊக்கத்  தொகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என்கிறார் பீட்டர் ஜான்.

குறிப்பு:

தென் மாவட்ட விஞ்ஞானி பற்றிய இந்த கட்டுரையை இந்த வார “புதிய தலைமுறை”(15.06.2012) இதழில் எனது எழுத்தாக பிரசுரமாகி இருக்கிறது.

4 comments:

அருமையான தகவலை
மிக அழகாக பதிவு செய்துள்ளீர்கள்
பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Government should encourage these innovations

Post a Comment