சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் புதிதாக அறிமுகப்
படுத்தப் பட்டுள்ளது ப்ரீபெய்ட் ஆட்டோ சேவை.
1997 ஆம் ஆண்டு அமல் படுத்த பட்ட இந்த திட்டத்தில் ஏற்பட்ட
பல குளறுபடியால் இந்த திட்டம் பாதியிலையே கைவிடப் பட்டது. மீண்டும் பல புதிய திருத்ததுடன்
நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தினமும் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை
சென்ட்ரல் இரயில் நிலையத்திற்க்கு வந்து போகின்றனர். 120 அதிவேக இரயில்களும், 273
எலெக்ட்ரிக் இரயில்களும் வந்து போகின்றன.
பல்வேறு மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வருவோர்களை
அங்கிருக்கும் ஆட்டோக்காரர்கள் அதிக பணத்தை வாங்கி கொண்டு ஏமாற்றி வருகின்றனர்.
இந்த நிலையை மாற்றவே சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில்
இருந்து 204 இடத்திற்கு ப்ரீபெய்ட் ஆட்டோ சேவையை அறிமுப்படுத்தியுள்ளது தமிழக
அரசு..
ப்ரீபெய்ட் ஆட்டோ சேவை கட்டண சீட்டில் ஆட்டோவின் பதிவெண், செல்லும்
இடம், கட்டண ரூபாய் என அனைத்தும் இடம் பெற்று இருப்பது சிறப்பம்சமாக இருக்கிறது.
இதன் மூலம் தவற விட்டுச் சென்ற பொருட்களையும் ஆட்டோவின்
என்னை வைத்து மீட்டு விடலாம்.
கட்டண சீட்டில் இருக்கும் தொகையை விட அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்டால்
உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இந்த நம்பருக்கு 9962500500 தொலைபேசி அழைப்பு
விடுக்கலாம். அல்லது சென்ட்ரல் இரயில் நிலைய அலுவரின் கைபேசிக்கும் தொடர்பு கொண்டு
புகாரை தெரிவிக்கலாம்.அவரது கைபேசி எண்-7598000099.
சென்னை வரும் புது பயணிகள் ஏமாற்றமடையாமல் தமிழக அரசின்
சேவையை பயன்படுத்திக் கொள்வடற்காகவே இந்த திட்டத்தை எண் வலை தளத்தில்
உங்களுக்காக்காக பகிர்ந்துள்ளேன்.
0 comments:
Post a Comment