Find us on Google+ இந்தியாவின் தேசிய விளையாட்டு கிரிக்கெட்டா? ஹாக்கியா? ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Tuesday 15 November 2011

இந்தியாவின் தேசிய விளையாட்டு கிரிக்கெட்டா? ஹாக்கியா?

இந்தியாவின் தேசியத்தை போற்றி வரும் நாம் ஒவ்வொன்றையும் மதிப்பு கொடுத்து பேணிக்காக்கிறோம். ஆனால் தேசிய விளையாட்டான ஹாக்கியை மட்டும் மறந்து வருகிறோம்..
   

ஆஸ்திரேலியாவின் தேசிய விளையாட்டான கிரிக்கெட்டிற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தால் இன்று உலக அளவில் கிரிக்கெட்டின் மோகம் கொடி கட்டிப் பறக்கிறது.
   

அரசியல் தலைவர்களும், சினிமாத் துறையின் பெரும் புள்ளிகளும் கிரிக்கெட் வீரர்களையே ஊக்கப்படுத்தி அவர்களுக்கு சன்மானம் அளிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது கிரிக்கெட்டை ஊக்குவிப்பதன் மூலம் நாம் நமது தேசிய விளையாட்டான ஹாக்கியை இழந்து வருகிறோம் என்று. இதே சன்மானத்தையும் உற்சாகத்தையும் ஹாக்கிக்கு கொடுத்திருந்தால் நாம் என்றோ ஒலிம்பிக்கில் ஹாக்கியை முத்திரை பதித்திருப்போம்.
   

கிரிக்கெட்டை சோம்பேறியான விளையாட்டு என பல பத்திரிக்கைகள் விமர்சித்துள்ளனர். இது நூற்றுக்கு நூறு உண்மை தான் நம்மை அடிமையாக்கி எந்த ஒரு வேலையையும் செய்ய விடாமல் தொலைக்காட்சியின் முன் அமர்ந்து கிரிக்கெட் பார்க்க வைக்கிறது. இதனால் நாம் எவ்வளவோ இழந்து வருகிறோம். ஆனால் அதைப் பற்றிய கவலை எவருக்குமே இல்லை.
   

ஐந்து வயது குழந்தைகள் கூட காலை எழுந்ததும் கிரிக்கெட் மட்டையை எடுத்துக் கொண்டு விளையாடச் செல்கிறார்கள். அந்த சிறுவனிடம் இந்தியாவின் தேசிய விளையாட்டு என்ன என்று கேட்டால் நிச்சயம் அவன் கூறும் பதில் கிரிக்கெட் என்று தான்.
   

இன்றைய நிலையில் ஐந்து முதல் ஐம்பது வரை அனைவருமே தொலைக்காட்சி முன் கிரிக்கெட் பார்க்க அமர்ந்தால் தன்னையே மறந்து அதில் மூழ்கி விடுகின்றனர். இந்த நிலை நீடித்தால் நிச்சயம் கிரிக்கெட் உலக விளையாட்டாகவும், ஹாக்கி என்று ஒரு விளையாட்டு இல்லாமலே அழிந்து போகும்.
   

கிரிக்கெட்டை மதித்து விளையாட வேண்டியது தான் தப்பில்லை ஆனால் அதே நேரத்தில் ஹாக்கியையும் மறந்து விடாதீர்கள்.




3 comments:

உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் கிரிக்கெட்டை மறந்துவிட்டு ஆக்கியை டிவி முன் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தால் அது சோம்பேறித்தனம் ஆகாதா? சிறுவர்கள் கிரிக்கெட் ஆடுகிறார்கள் என்றால் அது அவர்களின் உடலுக்கும் மனதுக்கும் நல்லதுதான் . ஆக்கி மட்டும்தான் உடற்பயிற்சி என்றல்ல, கிரிகெட்டும் ஓர் உடற்பயிற்சிதான்.

ஹாக்கி ஆட்டத்திற்கு தேவை இரண்டு மணி நேரம் மட்டுமே, அனைவரும் ஆடிக்கொண்டே இருக்க வேண்டும். கூடைபந்து, கைபந்து அனைத்தும் அப்படியே. கிரிக்க்கெட அப்படி அல்ல. மேலும் ஒலிம்பிக் உட்பட பல சர்வதேச போட்டிகளில் கிரிக்கெட் அங்கீகரிக்கப்படவில்லை.

Our national game is Hockey JP. Now a days, Punjab peoples are like Hockey team. I like Indian Hockey team also. Cricket is our one of the entertainment game ya. Once Indian hockey team got any one trophy or Olympic medal this game automatically reached in all the peoples.

Post a Comment